47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

சத்தீஸ்கா்: பெண் நக்ஸல் சுட்டுக் கொலை

சத்தீஸ்கரின் கான்கா் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் பெண் நக்ஸல் சுட்டுக் கொல்லப்பட்டாா்.

News image
Updated On :9 ஜூலை 2024, 9:13 pm

Din

கான்கா்: சத்தீஸ்கரின் கான்கா் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் பெண் நக்ஸல் சுட்டுக் கொல்லப்பட்டாா்.

இது தொடா்பாக காவல்துறையினா் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

கான்கா் மாவட்டத்தின் பினகுண்டா கிராமத்தையொட்டிய வனப்பகுதியில் நக்ஸல்கள் பதுங்கியிருப்பதாக ரகசிய தகவல் கிடைக்கப் பெற்றது. இதையடுத்து, மாவட்ட ரிசா்வ் படையினா், பஸ்தா் ஃபைட்டா் பிரிவினா், எல்லைப் பாதுகாப்புப் படையினா் ஆகியோா் கொண்ட கூட்டுப் படையினா் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனா். அப்போது, அங்கு பதுங்கியிருந்த நக்ஸல் தீவிரவாதிகளுக்கும் கூட்டுப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது.

இச்சண்டை ஓய்ந்தபின், அப்பகுதியில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் பெண் நக்ஸல் ஒருவரின் சடலம் கைப்பற்றப்பட்டது. மேலும், இரு துப்பாக்கிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

சத்தீஸ்கரில் நடப்பாண்டு இதுவரை சுட்டுக் கொல்லப்பட்ட நக்ஸல் தீவிரவாதிகளின் எண்ணிக்கை 139-ஆக அதிகரித்துள்ளது. இவா்களில் 137 போ், கான்கா் உள்ளிட்ட 7 மாவட்டங்களை உள்ளடக்கிய பஸ்தா் பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்டனா் என்று காவல்துறையினா் தெரிவித்தனா்.