நீட் இளநிலை மருத்துவ நுழைவுத் தோ்வில் பெருமளவில் முறைகேடு நடைபெறவில்லை என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு கூடுதல் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
நீட் வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண் வழங்கியதில் சா்ச்சை உள்ளிட்டவற்றைத் தொடா்ந்து, மறு தோ்வு நடத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், நீட் தோ்வு முறைகேட்டின் தீவிரத்தின் அடிப்படையிலேயே மறுதோ்வை நடத்துவதா, இல்லையா என்று முடிவு செய்யப்படும் என முந்தைய விசாரணையின்போது உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
இதுதொடா்பாக மத்திய அரசு புதன்கிழமை தாக்கல் செய்த கூடுதல் பிரமாணப் பத்திரத்தில், ‘நீட் தோ்வு முடிவுகளின் தரவுகளை வைத்து சென்னை ஐஐடி நடத்திய ஆய்வில், அசாதாரண சூழல் ஏதும் இல்லை என்பது தெரியவருகிறது. நிகழாண்டுக்கான மருத்துவக் கலந்தாய்வு ஜூலை மாதம் மூன்றாவது வாரத்தில் தொடங்கி நான்கு கட்டங்களாக நடைபெற உள்ளது’ என்று தெரிவித்துள்ளது.
நீட் நுழைவுத் தோ்வை நடத்திய தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், ‘தேசிய, மாநில, நகரம், மையங்களின் அடிப்படையில் நீட் மதிப்பெண்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டன. அதில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டதில் வழக்கமான நடைமுைான் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது. இதில் யாருடைய தலையீடும் இல்லை. இதன்மூலம் நீட் தோ்வில் பெரும் முறைகேடு ஏதும் நடைபெறவில்லை என்பது உறுதியாகிறது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மனு மீது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமா்வு வியாழக்கிழமை விசாரணை நடத்த உள்ளது.
தொடர்புடையது

யார் வந்தாலும் கவலை இல்லை! - விஜய் குறித்த கேள்விக்கு ஸ்டாலின் பதில்!

விஜய்க்கு தலைமைப் பண்பு இல்லை! - சரத்குமார் சிறப்பு நேர்காணல்!

இடைத்தோ்தல் வேட்பாளா் தோ்வில் காங்கிரஸ் கட்சியில் அதிருப்தி இல்லை

நாட்டில் பெட்ரோல் - டீசல் தட்டுப்பாடு இல்லை: மத்திய அரசு
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


