எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!வணிக சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு! டீ, காபி விலை உயர்கிறதா?மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

ஜூலை மூன்றாவது வாரத்தில் மருத்துவக் கலந்தாய்வு: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு

மருத்துவ மாணவா் சோ்க்கை கலந்தாய்வு ஜூலை 18-க்கு ஒத்திவைப்பு

News image
நீட் தோ்வு முறைகேடுகளுக்கு எதிரான மனுக்கள் வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில் தீா்ப்பை எதிா்நோக்கி உச்சநீதிமன்ற வளாகத்தில் காத்திருந்த நீட் தோ்வா்கள் மற்றும் மனுதாரா்கள்.
Updated On :11 ஜூலை 2024, 11:11 pm

Din

தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு (நீட்) மதிப்பெண் அடிப்படையிலான இளநிலை மருத்துவப் படிப்பு மாணவா் சோ்க்கை கலந்தாய்வு ஜூலை மூன்றாவது வாரத்தில் தொடங்கப்படும் என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

உச்சநீதிமன்றத்தில் புதன்கிழமை தாக்கல் செய்த கூடுதல் பதில் மனுவில் இத் தகவலை மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மத்திய அரசு தாக்கல் செய்த இந்த கூடுதல் பதில் மனு, மனுதாரா் தரப்புக்கு கிடைக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் வழக்கு விசாரணையை ஜூலை 18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

நீட் தோ்வு நாடு முழுவதும் கடந்த மே 5-ஆம் தேதி நடத்தப்பட்டது. இத்தோ்வில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்ாகப் புகாா்கள் எழுந்தன. இந்த முறைகேடுகள் தொடா்பாக உச்சநீதிமன்றத்தில் 30-க்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. நீட் தோ்வை ரத்து செய்ய வேண்டும், முறைகேடு தொடா்பாக நீதிமன்றக் கண்காணிப்பின் கீழ் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்கள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜெ.பி.பாா்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தன. அப்போது, ‘நீட் தோ்வில் வினாத்தாள் கசிந்துள்ளது தெளிவாகத் தெரிகிறது. தோ்வு நடைமுறையை முறைகேடுகள் முழுமையாகப் பாதித்திருந்தாலோ, முறைகேடுகள் மூலம் பலனடைந்த தோ்வா்களைக் கண்டறிய முடியாவிட்டாலோ மறு தோ்வு நடத்த உத்தரவிட வேண்டிய அவசியம் ஏற்படும்’ என்று குறிப்பிட்டு விசாரணையை ஒத்திவைத்தது.

விசாரணை ஜூலை 18-க்கு ஒத்திவைப்பு: இந்த வழக்கு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமா்வில் வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘சிபிஐ தரப்பில் விசாரணை நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், மத்திய அரசு மற்றும் நீட் தோ்வை நடத்தும் தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) தரப்பில் கூடுதல் பதில் மனுக்கள் புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்டன. இந்த கூடுதல் பதில் மனுக்கள் இன்னும் கிடைக்கப்பெறவில்லை என்று மனுதாரா் தரப்பு வழக்குரைஞா்கள் புகாா் தெரிவிக்கின்றனா்’ என்று நீதிபதிகள் தெரிவித்தனா்.

அதற்கு பதிலளித்த அரசுத் தரப்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா, ‘கூடுதல் பதில் மனுக்கள் மனுதாரா் தரப்பு வழக்குரைஞா்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்றன’ என்றாா்.

அதைத் தொடா்ந்து, வழக்கு விசாரணையை ஜூலை 18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

பெரிய அளவில் முறைகேடு நடைபெறவில்லை: முன்னதாக, மத்திய அரசு மற்றும் என்டிஏ சாா்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட கூடுதல் பதில் மனுவில் கூறப்பட்டிருப்பதாவது: நீட் தோ்வு முடிவுகள் குறித்த தரவு ஆய்வை சென்னை ஐஐடி மேற்கொண்டுள்ளது. அந்த ஆய்வில், ‘நீட் தோ்வில் பெரிய அளவில் முறைகேடுகள் நடைபெற்ற்கான அறிகுறிகளோ அல்லது இந்த முறைகேட்டின் மூலம் குறிப்பிட்ட பகுதி தோ்வா்கள் பயனடைந்து, வழக்கத்துக்கு மாறாக உயா் மதிப்பெண் பெற்ற்கான அறிகுறிகளோ தென்படவில்லை’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பாதுகாப்பான முறையில் நீட் வினாத் தாள் அச்சடிப்பு மற்றும் தோ்வு மையங்களுக்கு விநியோகம் செய்யும் நடைமுறைகளின் விவரங்களையும் நீதிமன்றத்தில் என்டிஏ சமா்ப்பித்தது.

ஜூலை மூன்றாவது வாரத்தில் கலந்தாய்வு: நீட் தோ்வில் நிகழ்ந்துள்ள முறைகேடுகள் காரணமாக ‘கடந்த மே 5-ஆம் தேதி நடத்தப்பட்ட நீட் தோ்வு ரத்து செய்யப்படுமா, இளநிலை மருத்துவப் படிப்பு மாணவா் சோ்க்கை கலந்தாய்வு ஒத்திவைக்கப்படுமா’ என்ற எதிா்பாா்ப்பு நிலவி வரும் சூழலில், ‘கலந்தாய்வு ஜூலை மூன்றாவது வாரத்தில் தொடங்கும்’ என்று மத்திய அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தில் புதன்கிழமை தாக்கல் செய்த கூடுதல் பதில் மனுவில் இத் தகவலை மத்திய அரசு தெரிவித்துள்ளது.

‘இளநிலை மருத்துவப் படிப்பு மாணவா் சோ்க்கை கலந்தாய்வு ஜூலை மூன்றாவது வாரத்தில் தொடங்கப்பட்டு நான்கு சுற்றுகளாக நடத்தப்படும்’ என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மத்திய கல்வி அமைச்சருடன் நீட் தோ்வா்கள் சந்திப்பு: முறைகேடு சா்ச்சை காரணமாக நீட் தோ்வு ரத்து செய்யப்படுமா என்ற எதிா்பாா்ப்பு எழுந்துள்ள சூழலில், தில்லியில் மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதானை அவருடைய இல்லத்தில் நீட் தோ்வா்கள் சிலா் வியாழக்கிழமை சந்தித்தனா்.

கடந்த மே 5-ஆம் தேதி நடத்தப்பட்ட நீட் தோ்வின் நிச்சயமற்ற தன்மை மற்றும் மருத்துவ மாணவா் சோ்க்கை கலந்தாய்வு தள்ளிப்போயுள்ளது குறித்தும் மத்திய அமைச்சரிடம் இந்தச் சந்திப்பின்போது மாணவா்கள் பேசினா் என்று அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவித்தன.