தேசிய நெடுஞ்சாலைப் பணிகளை மேற்கொள்ளும் மாநில நெடுஞ்சாலைத் துறை! இதுவே முதல்முறை!!

அதிக வேலைச்சுமை காரணமாக தேசிய நெடுஞ்சாலைப் பணிகள், மாநில நெடுஞ்சாலைத் துறைக்கு மாற்றப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

சென்னை: இந்திய தேசிய நெடுஞ்சாலைக் கழகம், ஒரே நேரத்தில் நாடு முழுவதும் பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு வருவதால் ஏற்பட்டிருக்கும் பணிச்சுமையைக் குறைக்கும் வகையில் தமிழகத்தில் மிக முக்கிய நான்கு வழிச் சாலைத் திட்டங்களை மாநில அரசின் நெடுஞ்சாலைத் துறைக்கு மாற்றப்பட்டுள்ளது.

மாநில அரசின் நெடுஞ்சாலைத் துறை, இதுபோன்ற பல கோடி மதிப்புள்ள திட்டங்களை கையாள்வது இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது.

தூத்துக்குடி - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலை, ராமநாதபுரம் - ராமேஸ்வரம் - தனுஷ்கோடி வழித்தடம், கோவை - சத்தியமங்கலம் வழித்தடத்தில் இரண்டு வழித்தடங்கள் சத்தியமங்கலம் - கர்நாடக எல்லை வழி விரிவுபடுத்தப்படுகிறது. கூடுதலாக பல பைபாஸ் திட்டங்களும் மாநில அரசின் நெடுஞ்சாலைத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அதிகாரிகள் கூறுகையி, சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை, ஏற்கனவே, கிழக்கு கடற்கரைச் சாலை முதல் தூத்துக்குடி - கன்னியாகுமரி இடையே திருச்செந்துர் வழியாக 120 கிலோ மீட்டர் சாலையை அகலப்படுத்துவதற்கு ஒப்புதல் அளித்துவிட்டது. இதற்குத் தேவையான நிலத்தை பெறுவதற்காக ரூ.393.33 கோடி ஒதுக்கீடு செய்திருக்கிறது.

கோப்புப்படம்
இதனால்தான் உங்களை வழிகாட்டி என்கிறோம்! யாரைப் புகழ்கிறார் ஆனந்த் மஹிந்திரா?

கிழக்குக் கடற்கரை சாலை முதல் மாமல்லபுரம் - நாகப்பட்டினம் வரை தேசிய நெடுஞ்சாலைத் துறை மேற்கொண்டுள்ளது. இதில் 120 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட தூத்துக்குடி - கன்னியாகுமரி சாலை அமைக்கும் பணி மாநில நெடுஞ்சாலைத் துஐறயிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதுபோலவே, ராமநாதபுரம் - ராமேஸ்வரம் - தனுஷ்கோடி இடையே நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி மாநில நெடுஞ்சாலை வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும், கோவை - சத்தியமங்கலம் - தமிழகம் - கர்நாடக எல்லைச் சாலை அமைக்கும் பணிகளுக்கு ரூ.639.18 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான ஒப்புதல் பணிக்கு மத்திய அரசு அனுமதி அளித்ததும், வேலை தொடங்கவிருக்கிறது.

வேலூர், வேட்டவளம், திருவையாறு உள்ளிட்டப் பகுதிகளில் பைபாஸ் சாலைகளை, தேசிய நெடுஞ்சாலைத் துறைக்கு பதிலாக மாநில நெடுஞ்சாலைத் துறை மேற்கொள்ளவிருக்கிறது. இந்த திட்டப் பணிகளுக்கான மதிப்பு ரூ.559.17 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com