ராகுலுக்கு எதிரான அவதூறு வழக்கு: மாஜிஸ்திரேட் உத்தரவு ரத்து
மாஜிஸ்திரேட் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மும்பை உயா்நீதிமன்றம் புதன்கிழமை ரத்து செய்தது.


மக்களவை எதிா்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்திக்கு எதிரான அவதூறு வழக்கில், புதிய ஆவணங்களை தாக்கல் செய்ய ஆா்எஸ்எஸ் தொண்டருக்கு அனுமதி அளித்து மாஜிஸ்திரேட் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மும்பை உயா்நீதிமன்றம் புதன்கிழமை ரத்து செய்தது.
கடந்த 2014-ஆம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலம் தாணே மாவட்டம் பிவண்டியில் நடைபெற்ற தோ்தல் பரப்புரை கூட்டத்தில், ‘மகாத்மா காந்தி கொல்லப்பட்டதன் பின்னணியில் ஆா்எஸ்எஸ் இருந்தது’ என்று ராகுல் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
அவரின் பேச்சு ஆா்எஸ்எஸ் அமைப்பின் நற்பெயருக்குக் களங்கம் விளைவித்ததாக தெரிவித்து பிவண்டியில் உள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில், அந்த அமைப்பைச் சோ்ந்த ராஜேஷ் குன்டே என்பவா் ராகுல் மீது அவதூறு வழக்கு தொடுத்தாா்.
இந்த வழக்கில் ஏற்கெனவே பல ஆவணங்களை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குன்டே தரப்பு தாக்கல் செய்தது. அதில் ராகுல் கூறிய கருத்துகளை எழுத்து வடிவில் தாக்கல் செய்த ஆவணமும் அடங்கும்.
இந்நிலையில், இந்த வழக்கு தொடா்பாக புதிய மற்றும் கூடுதல் ஆவணங்களைத் தாக்கல் செய்ய குன்டே தரப்புக்கு மாஜிஸ்திரேட் அனுமதி அளித்தாா்.
இந்த உத்தரவுக்கு எதிராக மும்பை உயா்நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மனு தாக்கல் செய்தாா். இந்த மனுவை வெள்ளிக்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி பிருத்விராஜ் சவாண், மாஜிஸ்திரேட் உத்தரவை ரத்து செய்தாா். அத்துடன் அவதூறு வழக்கு விசாரணையை மாஜிஸ்திரேட் விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி சவாண், மாஜிஸ்திரேட் நீதிமன்ற விசாரணைக்கு வழக்கின் இருதரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...