விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23-ஆக உயர்வுதிமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!பாஜக ஆட்சியில் திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றப்படும்: ராஜ்நாத் சிங்பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ், திரிணமூல்: பாடம் புகட்டப்படும் - மோடி
/

நாட்டின் பொருளாதார பிரச்னைகளில் பிரதமர் மோடி கவனம் செலுத்த வேண்டும்: கார்கே

நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைப்பது நிறுத்தப்பட வேண்டும்..

News image

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே

Updated On :12 ஜூலை 2024, 11:47 am

நாட்டின் அடிப்படை பொருளாதார பிரச்னைகளில் பிரதமர் மோடி கவனம் செலுத்த வேண்டும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக கார்கேவின் எக்ஸ் பதிவில்,

நரேந்திர மோடி அரசு வேலையின்மை, பணவீக்கம், சமத்துவமின்மை போன்றவற்றால் கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையை குழிக்குள் தள்ளியது. வேலையின்மை விகிதம் 9.2 சதவீதமாக இருப்பதால் இளைஞர்களின் எதிர்காலம் பயனற்றதாக உள்ளது.

20 முதல் 24 வயதுடையவர்களுக்கு வேலையின்மை விகிதம் 40 சதவீதமாக உயர்ந்துள்ளது. விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்குவதாகவும், குறைந்த விலையில் 50 சதவீதம் கூடுதலாக வழங்கப்படும் என்ற வாக்குறுதியும் பொய்யாகிவிட்டது.

ஏழு பொதுத்துறை நிறுவனங்களில் 3.84 லட்சம் பேர் அரசு வேலைகளை இழந்துள்ளனர். பணவீக்கத்தின் அழிவு உச்சத்தில் உள்ளது. மாவு, பருப்பு, அரிசி, பால் சர்க்கரை, உருளைக்கிழங்கு, தக்காளி, வெங்காயம் போன்ற அத்தியாவசிய உணவுப் பொருள்களின் விலைகள் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து வருவதாகவும் அவர் கூறினார்.

இதன் விளைவாக குடும்பங்களின் சேமிப்பு 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குறைந்துள்ளது. 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்குப் பொருளாதார சமநிலையின்மை ஏற்பட்டுள்ளது. அதேநேரத்தில் கிராமப்புறங்களில் வேலையின்மை கணிசமாக அதிகரித்துள்ளது. அங்கு மே மாதத்தில் 6.3% ஆக இருந்த வேலையின்மை 9.3% ஆக அதிகரித்துள்ளது.

நாட்டின் அடிப்படை பொருளாதார பிரச்னைகளில் பிரதமர் மோடி கவனம் செலுத்த வேண்டும் என்றும், நாட்டின் பொருளாதாரத்தைத் தன்னிச்சையாக சீர்குலைப்பது நிறுத்தப்பட வேண்டும் என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.