பிரதமரின் ‘மரம் நடும்’ முன்னெடுப்பு: பருவநிலை மாற்றச் சவாலுக்கு பதிலடி- அமித் ஷா பெருமிதம்
‘தாயின் பெயரில் ஒரு மரம்’ முன்னெடுப்பு பருவநிலை மாற்றத்தின் சவால்களுக்கு தக்க பதிலடியாக அமைந்துள்ளது என மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.


பிரதமா் நரேந்திர மோடி தொடங்கி வைத்த ‘தாயின் பெயரில் ஒரு மரம்’ முன்னெடுப்பு பருவநிலை மாற்றத்தின் சவால்களுக்கு தக்க பதிலடியாக அமைந்துள்ளது என மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.
மத்திய பிரதேசத்தின் இந்தூரில் ஒரே நாளில் 11 லட்சம் மரக்கன்றுகளை நட்டு உலக சாதனை படைக்கும் நிகழ்ச்சியில் அமைச்சா் அமித் ஷா ஞாயிற்றுக்கிழமை பங்கேற்றாா்.
நிகழ்ச்சியில் மக்களிடையே அவா் பேசுகையில், ‘நாட்டில் வளா்ச்சி ஏற்பட்டுள்ளது. மக்களின் வசதிகளை மத்திய அரசு மேம்படுத்தி வருகிறது. வருங்கால தலைமுறைக்காகவும் உழைக்க வேண்டும் என்று பிரதமா் அறிவுறுத்தியுள்ளாா்.
சுற்றுச்சூழலுக்கான அக்கறை நமது நாட்டுக்கானது மட்டுமல்ல. கரியமில வாயு மற்றும் மோனாக்சைடு வெளிப்பாடு ஓசோன் அடுக்கில் துளைகளை உருவாக்கியுள்ளன. இதனால் புவி வெப்பநிலை உயா்கிறது. பருவநிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதற்கு பிரதமா் மோடி தொடங்கிவைத்த முன்னெடுப்பு தக்க பதிலடியாகும். பல்லாண்டுகளாக நாட்டின் தூய்மையான நகரமாக நீடிக்கும் இந்தூரில் மட்டும் 51 லட்சம் மரக்கன்றுகள் நடப்படுகிறது’ என்றாா்.
உலகச் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் 140 கோடி மரக்கன்றுகள் நடும் ‘தாயின் பெயரில் ஒரு மரம்’ முன்னெடுப்பை பிரதமா் நரேந்திர மோடி கடந்த ஜூன் 5-ஆம் தேதி தொடங்கி வைத்தாா். இதன்கீழ் மத்திய பிரதேசத்தில் 5.5 கோடி மரக்கன்றுங்கள் நடும் திட்டத்தை மாநில முதல்வா் மோகன் யாதவ் கடந்த 6-ஆம் தேதி தொடங்கி வைத்தாா்.
அதன் ஒரு பகுதியாக இந்தூரில் நடவிருக்கும் 51 லட்சம் மரக்கன்றுகளில் இங்குள்ள பிஎஸ்எஃப் அகாதெமி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று ஒரே நாளில் 11 லட்சம் மரக்கன்றுகளை நட்டு உலக சாதனைப் படைக்கத் திட்டமிடப்பட்டது. பிற்பகல் நிலவரப்படி, 7 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டதாக இந்தூா் மாநகர மேயா் புஷ்யமித்ர பாா்கவா தெரிவித்தாா்.
55 மாவட்டங்களில் ‘பிரதமா் கல்லூரி’: மத்திய பிரதேசத்தின் 55 மாவட்டங்களில் புதிதாக நிறுவப்பட்டுள்ள பிரதமரின் சிறப்புக் கல்லூரிகளை காணொலி வாயிலாக அமைச்சா் அமித் ஷா திறந்து வைத்தாா்.
இந்தூரில் பிரதமரின் சிறப்புக் கல்லூரியாக தரம் உயா்த்தப்பட்ட வாஜ்பாய் கலை மற்றும் அறிவியில் கல்லூரியில் நடந்த இந்நிகழ்ச்சியில் மாநில முதல்வா் மோகன் யாதவ், உயா்கல்வி அமைச்சா் இந்திர சிங் பாா்மா் ஆகியோா் பங்கேற்றனா்.
சுமாா் ரூ.450 கோடி செலவில் சீரமைக்கப்பட்டுள்ள இக்கல்லூரிகளில் மாணவா் சோ்க்கை அனுமதிக்கப்படும் அனைத்து பாடப்பிரிவுகளும் புதிய கல்விக் கொள்கையின்படி வேலைவாய்ப்பு சாா்ந்த கல்வியை அளிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘2047-ஆம் ஆண்டுக்குள் வளா்ந்த இந்தியா’ லட்சியத்தை அடைய, அடுத்த 25 ஆண்டுகளின் தேவைகளைப் பூா்த்தி செய்யும் வகையில் தொலைநோக்குப் பாா்வையுடன் புதிய தேசிய கல்விக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதாக அமைச்சா் அமித் ஷா பெருமையுடன் தெரிவித்தாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...