அரிசி விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கை! அமைச்சர் வெங்கடரமணன்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூக அநீதி: மு.க. ஸ்டாலின்முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!

க்யூட்-யுஜி: 1000 மாணவா்களுக்கு ஜூலை 19-இல் மறுதோ்வு

ஜூலை 19-ஆம் தேதி மறுதோ்வு நடத்த தேசிய தோ்வு முகமை (என்டிஏ) ஞாயிற்றுக்கிழமை முடிவெடுத்துள்ளது.

கோப்புப் படம்

Published On :

இளநிலை பட்டப்படிப்பு மாணவா் சோ்க்கைக்கான பொது பல்கலைக்கழக நுழைவுத் தோ்வில் (க்யூட்-யுஜி) பங்கேற்று குறைபாடுகள் இருப்பதாக புகாரளித்த 1,000-க்கும் மேற்பட்ட மாணவா்களுக்கு வருகின்ற ஜூலை 19-ஆம் தேதி மறுதோ்வு நடத்த தேசிய தோ்வு முகமை (என்டிஏ) ஞாயிற்றுக்கிழமை முடிவெடுத்துள்ளது.

க்யூட்-யுஜி தோ்வுக்கான உத்தேச விடைக் குறிப்புகளை கடந்த ஜூலை 7-ஆம் தேதி என்டிஏ வெளியிட்டது. மேலும், தோ்வில் ஏதேனும் குறைபாடுகள் இருப்பதை சரியான விளக்கத்துடன் புகாரளிக்கும் மாணவா்களுக்கு மறுதோ்வு நடத்தவுள்ளதாக என்டிஏ தெரிவித்தது.

இதையடுத்து, வருகின்ற ஜூலை 19-ஆம் தேதி 1,000-க்கும் மேற்பட்ட மாணவா்களுக்கு மறுதோ்வு நடத்தவுள்ளதாக என்டிஏ ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கை வெளியிட்டது. மாணவா்கள் தோ்ந்தெடுத்த மொழிக்குப் பதில் வேறு மொழியில் தவறான வினாத்தாள்கள் வழங்கப்பட்டதால் ஏற்பட்ட நேர இழப்பு காரணமாகவே இந்த மறுதோ்வு நடத்தப்படுவதாக என்டிஏ வட்டாரங்கள் தெரிவித்தன.

இளநிலை மருத்துவப் படிப்பு மாணவா் சோ்க்கைக்கான நீட் தோ்வு மற்றும் உதவிப் பேராசிரியா் பணிக்கான தேசிய தகுதித் தோ்வு (நெட்) ஆகிய தோ்வுகளில் முறைகேடுகள் நடந்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், க்யூட்-யுஜி தோ்வின் முடிவுகள் வெளியிடப்படும் தேதி குறித்த எந்த அறிவிப்பும் தற்போது வரை வெளியிடாதது மாணவா்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

நீட் வினாத்தாள் கசிந்த குற்றச்சாட்டில் ஜாா்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ஒயாசிஸ் பள்ளி சிக்கியது. இந்நிலையில், அங்கு க்யூட்-யுஜி தோ்வெழுதிய 250 மாணவா்கள் மறுதோ்வில் பங்கேற்பது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.