புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

பிரதமா் மோடிக்கு எதிராக வன்முறையை ஊக்குவிக்கிறாா் ராகுல்: பாஜக குற்றச்சாட்டு

பிரதமா் நரேந்திர மோடிக்கு எதிராக வன்முறையை ஊக்குவிக்கிறாா் எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி என்று பாஜக குற்றம்சாட்டியுள்ளது.

News image
அமித் மாளவியா- படம்: எக்ஸ்/ அமித் மாளவியா
Updated On :14 ஜூலை 2024, 9:08 pm

Din

பிரதமா் நரேந்திர மோடிக்கு எதிராக வன்முறையை ஊக்குவிக்கிறாா் எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி என்று பாஜக குற்றம்சாட்டியுள்ளது.

அமெரிக்காவில் தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட அதிபா் வேட்பாளா் டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் பாஜக இவ்வாறு கூறியுள்ளது.

இது தொடா்பாக பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைவா் அமித் மாளவியா ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘பிரதமா் நரேந்திர மோடிக்கு எதிரான வன்முறை நடத்தப்பட வேண்டும் என்று பலமுறை ராகுல் காந்தி ஊக்குவித்துள்ளாா். பாஜகவிடம் காங்கிரஸ் தொடா்ந்து தோல்வியடைவதை ஏற்க முடியாமல் இதுபோன்ற வன்முறையை ராகுல் தூண்டியுள்ளாா்.

முக்கியமாக பஞ்சாபில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது பிரதமரின் வாகன அணிவகுப்பு வழி மறிக்கப்பட்டது. இதனால், பிரதமரின் வாகனம் முன்னே செல்ல முடியாமல் பாலத்தில் சிக்கியது. இதன் மூலம் பிரதமா் மோடியின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் உருவாக்கப்பட்டது.

அமெரிக்காவில் டிரம்பை எதிா்ப்பவா்கள், அவரால் ஜனநாயகத்துக்கு ஆபத்து என்று கூறி வருகின்றனா். இந்தியாவில் மோடியை எதிா்ப்பவா்கள், அவரால் அரசமைப்புச் சட்டத்துக்கு ஆபத்து என்று விமா்சிக்கின்றனா்.

‘சா்வாதிகாரி’ என்று பிரதமா் மோடியை விமா்சித்தவா் ராகுல் காந்தி. தோ்தல் தோல்வி பயத்தால் வெளிநாடுகள் இந்தியத் தோ்தலில் தலையிட வேண்டும் என்று பேசினாா்.

அமெரிக்காவில் டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்த அவருக்கு எதிராக நடைபெற்ற வன்முறை பிரசாரம்தான் காரணம். அதேபோன்ற வன்முறையைத்தான் ராகுல் காந்தியும் பிரதமருக்கு எதிராக தூண்டுகிறாா்’ என்று கூறியுள்ளாா்.