தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

ஓடும் காரில் பெண் பாலியல் வன்கொடுமை!

புகார் அளிக்க வந்தவரை பாலியல் வன்கொடுமை செய்தவர்களை தேடி வருகின்றனர்

News image
Updated On :15 ஜூலை 2024, 11:07 am

DIN

ஹைதராபாத்தில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

ஹைதராபாத்தில் பெண் ஒருவர் வீட்டில் குடும்பத்தினருடன் பிரச்னை நடந்ததால், புகார் அளிப்பதற்காக பொல்லாரம் காவல் நிலையத்திற்கு ஆட்டோவில் சென்றுள்ளார். புகார் அளித்துவிட்டு, மீண்டும் ஆட்டோவில் பயணம் செய்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, ஆட்டோ ஓட்டுநர் செல்லும் வழியில் வேறு இருவரையும் ஆட்டோவில் அழைத்துக்கொண்டு சென்றுள்ளார். பின்னர் ஆட்டோவில் ஏறிய இருவரும் அந்தப் பெண்ணை மிரட்டி, வேறொரு காரில் ஏற்றி அழைத்துச் சென்று, காரினுள்ளேயே பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இதனையடுத்து கடந்த சனிக்கிழமை (ஜூலை 13) அதிகாலை 2.30 மணியளவில், அவர்களிடமிருந்து தப்பித்த அந்தப் பெண், அல்வால் காவல் நிலையத்திற்கு போன் செய்து புகார் அளித்துள்ளார்.

பெண் அளித்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.