குஜராத்தில் பரவும் புதிய வைரஸ்: 6 குழந்தைகள் பலி!

குஜராத்தில் பரவி வரும் புதிய வைரஸ் தொற்று பாதிப்பால் இதுவரை 6 குழந்தைகள் பலியானதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

குஜராத் மாநிலத்தில் ’சந்திபுரா’ எனப்படும் புதிய வகை வைரஸ் பரவி வருவதாகவும், வைரஸ் தாக்கி இதுவரை 6 குழந்தைகள் பலியானதாகவும் அதிர்ச்சித் தகவல் வெளியகியுள்ளது.

குஜராத்தின் ஆரவல்லி மற்றும் சபர்கந்தா மாவட்டங்களில் சந்திபுரா வைரஸ் (சி.ஹெச்.பி.வி) பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் பரவல் தொடர்பாக விளக்கமளித்த குஜராத் சுகாதாரத்துறை அமைச்சர் ரிஷிகேஷ், “சந்திபுரா வைரஸ் தாக்குதலால் இதுவரை 6 பேர் இறந்துள்ளதாகப் பதிவாகியுள்ளது. தொற்று மாதிரிகளை சோதனை செய்து அதன் முடிவுகள் வெளியான பின்புதான் இது சந்திபுரா வைரஸ் தாக்குதலா, இல்லையா என்பதைச் சொல்லமுடியும்.

சந்திபுரா வைரஸ் பாதிப்பால் மூளை அழற்சி நோய் ஏற்படுமென்று மக்கள் பயப்படத் தேவையில்லை. ஆனால், அனைவரும் கவனமாக இருக்கவேண்டியது அவசியம்” என்று கூறினார்.

மேலும், “இதுவரை இந்த வைரஸ் தாக்கியிருப்பதாக சந்தேகிக்கப்படும் 12 நபர்கள் மாநில அரசின் கண்காணிப்பில் உள்ளனர். அதில், 6 பேர் சிகிச்சை எடுத்து வருகின்றனர். அதுமட்டுமின்றி, ராஜஸ்தானில் 2 பேருக்கும், மத்தியப் பிரதேசத்தில் ஒருவருக்கும் இந்த வைரஸ் தாக்கியிருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த வைரஸ் தாக்கப்பட்டவர்களின் உடல்களில் மாதிரிகள் எடுக்கப்பட்டு புனேவில் உள்ள ஆய்வகத்திற்கு சோதனக்காக அனுப்பப்பட்டுள்ளது. இதன் முடிவுகள் 12 முதல் 15 நாள்களில் தெரிந்துவிடும்”

கோப்புப் படம்
தில்லியில் ஒரு கேதார்நாத் கோவில் கட்டுவதா? கடும் எதிர்ப்பு!

”சந்திபுரா வைரஸ் தொற்றுநோய் அல்ல. ஆனால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இதுவரை 4,487 வீடுகளில் மொத்தம் 18,646 பேர் பரிசோதிக்கப்பட்டுள்ளனர். கூடுதலாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 2,093 வீடுகளில் பூச்சிக்கொல்லி மருந்து தெளித்து பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் பணியில் மாநில சுகாதாரத்துறை ஈடுபட்டுள்ளது.

ஆரம்பக்கட்ட நோய் அறிகுறிகள் தெரிந்தால் உடனே அருகிலிருக்கும் மருத்துவமனைக்குச் செல்லுங்கள்” என்று அமைச்சர் வலியுறுத்தினார்.

1965-ம் ஆண்டு மகாராஷ்டிரத்தில் சந்திபுரா மாவட்டத்தில் காய்ச்சல் அறிகுறிகளுடன் கூடிய மூளைக் காய்ச்சல் (CHPV) தொற்றுநோய் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. பின்னர் ஆந்திரா, குஜராத் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் இந்த தொற்றுநோய் பரவியது.

இந்த வைரஸ் குறைவாக அறியப்பட்டிருந்தாலும் இந்தியா, ஆசியா மற்றும் ஆப்ரிக்கா பகுதிகளில் ஆங்காங்கே பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

சந்திபுரா வைரஸ் பெரும்பாலும் குழந்தைகளைத் தாக்குவதால் ஆரம்பநிலை அறிகுறிகளின் போதே மருத்துவமனையில் பரிசோதனை செய்துகொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

சந்திபுரா வைரஸ் தொற்று அறிகுறிகள்:

காய்ச்சல், வலிப்பு, உணர்திறன் பாதிப்பு போன்றவை ஆரம்பநிலை அறிகுறிகள்.

தொற்று தீவிரமடையும் போது கோமா மற்றும் உயிரிழப்பினைக் கூட ஏற்படுத்தும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com