பதவி உயர்வு பெற்று உச்ச நீதிமன்றத்திற்கு செல்லும் தமிழக நீதிபதி!
உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக புதிதாக இரண்டு நீதிபதிகள் நியமனம்


சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி மகாதேவன் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக பணி உயர்வு பெற்றார்.
மணிப்பூரைச் சேர்ந்த கோடிஸ்வர் சிங் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த ஆர்.மகாதேவன் ஆகிய இருவரும் பணி உயர்வு பெற்று, உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளதாக, சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தனது எக்ஸ் பக்கத்தில், இன்று (ஜூலை 16) 1 மணியளவில் அறிவித்தார். இதன்மூலம், உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகளின் எண்ணிக்கை 34-ஆக உயர்ந்த்ள்ளது.
தமிழக அரசின் கூடுதல் அரசு வழக்கறிஞராகவும், மத்திய அரசின் கூடுதல் நிலை வழக்கறிஞராகவும், சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்திய அரசின் மூத்தக் குழு வழக்கறிஞராகவும் பணியாற்றியுள்ளார். 2013ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார்.
கூடுதலாக, மணிப்பூரிலிருந்து பதவி உயர்வு பெற்று உச்ச நீதிமன்றத்திற்கு செல்லும் முதல் நீதிபதி என்ற பெருமையைப் பெற்றார் கோடிஸ்வர் சிங். இவர், தற்போது ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக்கின் தலைமை நீதிபதியாக உள்ளார்.
மேலும், தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக உள்ள ஆர்.மகாதேவனும் பதவி உயர்வு பெற்று உச்ச நீதிமன்றத்திற்குச் செல்கிறார். இவர், 9000-க்கும் மேற்பட்ட வழக்குகளில் பணியாற்றியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...