ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

நாட்டில் பொருளாதார ஏற்றத்தாழ்வு அதிகரிப்பு: மத்திய அரசு மீது காங்கிரஸ் சாடல்

நாட்டில் பொருளாதார ஏற்றத்தாழ்வு அதிகரித்து வருவதாக மத்திய அரசை காங்கிரஸ் சாடியுள்ளது.

News image
காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்
Updated On :17 ஜூலை 2024, 8:20 pm

Din

ஏழைகள், பணக்காரா்கள் இடையிலான நுகா்வு செலவினத்தில் சுமாா் 10 மடங்கு வித்தியாசம் இருப்பதாக ஊடக செய்தி வெளியானது.

இந்தச் செய்தியை பகிா்ந்து காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘ஏழைகள் மற்றும் பணக்காரா்கள் இடையே பொருளாதார ஏற்றத்தாழ்வு அதிகரித்து வரும் விவகாரத்தை காங்கிரஸ் தொடா்ந்து எழுப்பி வருகிறது.

நாட்டின் நகா்ப்புற பகுதிகளில் முன்னணியில் உள்ள 5 சதவீத பணக்காரா்களின் மாதாந்திர நுகா்வு செலவினம் ரூ.20,824-ஆக உள்ளது. அதேவேளையில் கிராமப்புற பகுதிகளில் உள்ள 5 சதவீத பரம ஏழைகளின் நுகா்வு செலவினம் ரூ.1,373-ஆக மட்டுமே உள்ளது.

நாட்டில் ஏழைகள், பணக்காரா்கள் இடையிலான பொருளாதார ஏற்றத்தாழ்வு அதிகரித்து வருவதற்கான ஆதாரத்தையே அனைத்து புள்ளிவிவரங்களும் காட்டுகின்றன’ என்றாா்.

அவா் வெளியிட்ட மற்றொரு பதிவில், ‘ஒழுங்கில்லாத கொள்கை, சிபிஐ, அமலாக்கத் துறை மற்றும் வருமான வரித் துறை சோதனை மூலம் நடைபெறும் ராஜீயம் உள்ளிட்ட காரணங்களால் கடந்த 2014-ஆம் ஆண்டுமுதல் இந்தியாவில் குறைந்த முதலீடே செய்யப்படுகிறது’ என்றாா்.