5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு! ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

பிப்ரவரியில் நிலக்கரி உற்பத்தி 2 கோடி டன்னாக அதிகரிப்பு

நாட்டில் உள்ள நிலக்கரி சுரங்கங்கள் கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் 2.04 கோடி டன் நிலக்கரியை உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளன.

News image
Updated On :3 மார்ச் 2026, 9:14 pm

தினமணி செய்திச் சேவை

நாட்டில் உள்ள நிலக்கரி சுரங்கங்கள் கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் 2.04 கோடி டன் நிலக்கரியை உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளன.

அதேபோல், சுரங்கங்களிலிருந்து நிலக்கரி விநியோகம் 1.77 கோடி டன்னாக அதிகரித்துள்ளதாக மத்திய நிலக்கரி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

நடப்பு 2025-26 நிதியாண்டில், ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையிலான காலகட்டத்தில் ஒட்டுமொத்த நிலக்கரி உற்பத்தி முந்தைய 2024-25 ஆண்டைவிட 11.58 சதவீதம் அதிகரித்து, 18.71 கோடி டன்னாக அதிகரித்துள்ளது.

இதே காலகட்டத்தில் நிலக்கரி விநியோகமும் 6.78 சதவீதம் வளா்ச்சி கண்டு, 18.44 கோடி டன்னை எட்டியுள்ளது.

நிலக்கரித் துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீா்திருத்தங்கள் மற்றும் பங்குதாரா்களுக்கு அளிக்கப்படும் தொடா் ஆதரவு ஆகியவை இந்த உற்பத்தி அதிகரிப்புக்கு முக்கியக் காரணங்களாக அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது.