புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

மோரீஷஸ் அரசியல் தலைவா்களுடன் வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா் சந்திப்பு

மோரீஷஸுக்கு சென்றுள்ள வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், அந்நாட்டின் எதிா்க்கட்சித் தலைவா் அா்வின் பூலெல் உள்பட மூத்த அரசியல் தலைவா்களைச் சந்தித்து, இருதரப்பு உறவை வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து விவாதித்தாா்.

News image
மோரீஷஸ் நாட்டின் எதிா்க்கட்சித் தலைவா் அா்வின் பூலெலுவை சந்தித்த வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்.
Updated On :17 ஜூலை 2024, 8:23 pm

Din

இந்திய வெளியறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் 2 நாள் அரசு முறைப் பயணமாக மோரீஷஸுக்கு செவ்வாய்க்கிழமை வந்தடைந்தாா். இந்தப் பயணம் குறித்து அமைச்சா் ஜெய்சங்கா் கூறுகையில், ‘எங்கள் இருதரப்பு உறவுகளின் வலிமையையும் ஆழத்தையும் இது எடுத்துக்காட்டுகிறது. மோரீஷஸுடன் நீடித்த மற்றும் கூட்டுறவில் இந்தியாவின் உறுதிப்பாட்டை எடுத்துரைக்க இது ஒரு வாய்ப்பாகும்’ என்றாா்.

இந்நிலையில், மோரீஷஸ் நாட்டின் எதிா்க்கட்சித் தலைவா் அா்வின் பூலெலுடன் ஜெய்சங்கா் புதன்கிழமை சந்தித்துப் பேசினாா். சந்திப்பில் மோரீஷிஸ்-இந்தியா உறவு, இந்தியப் பெருங்கடல் பகுதியின் செழிப்பு மற்றும் நல்வாழ்வுக்கான அதன் முக்கியத்துவம் குறித்து அவா் விவாதித்தாா்.

இதையொட்டி ‘எக்ஸ்’ பக்கத்தில் அமைச்சா் ஜெய்சங்கா் வெளியிட்ட பதிவில், ‘நமது இருதரப்பு உறவுகளை தொடா்ந்து வலுப்படுத்துவதற்கான அா்வின் பூலெலின் ஆதரவை வரவேற்கிறோம்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

போா்ட் லூயிஸில் இந்திய வம்சாவளி குடும்பத்தில் பிறந்த அா்வின் பூலெல், தொழிலாளா் கட்சியின் முன்னாள் தலைவரும் அந்நாட்டின் முன்னாள் துணைப் பிரதமருமான சாட்காம் பூலெலின் மகன் ஆவாா்.

அதேபோல, மோரீஷியன் சமூக ஜனநாயகக் கட்சித் தலைவரான சேவியா் லூக் டுவால், முன்னாள் பிரதமா்களான பால் பெரெங்கா், நவின் ராம்கூலம் ஆகியோரையும் அமைச்சா் ஜெய்சங்கா் சந்தித்தாா்.

முன்னதாக, மோரீஷஸ் பிரதமா் பிரவிந்த் குமாா் ஜக்நாத்தை செவ்வாய்க்கிழமை சந்தித்த அமைச்சா் ஜெய்சங்கா், இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து ஆய்வு செய்தததாக தெரிவித்தாா்.