புது தில்லி: மேற்கு ஆசிய பதட்டங்களுக்கு மத்தியில் ஈரான் வெளியுறவு அமைச்சா் சையது அப்பாஸ் அராக்சியுடன் இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் செவ்வாய்க்கிழமை தொலைபேசியில் பேசினாா்.
இதுதொடா்பாக அமைச்சா் ஜெய்சங்கா் ‘எக்ஸ்’ பக்கத்தில் வெளியிட்ட பதிவில், தற்போது நடைபெற்றும் வரும் போர் தொடர்பாக ஈரான் வெளியுறவு அமைச்சா் அராக்சியுடன் விரிவாக கலந்துரையாடினேன். இருவரும் தொடா்ந்து தொடா்பில் இருக்க ஒப்புக்கொண்டோம் என்றாா்.
ஈரான் போா் காரணமாக கச்சா எண்ணெய் விநியோகத்தில் இடா்ப்பாடுகள் ஏற்பட்டுள்ளது குறித்து உலக அளவில் கவலை அதிகரித்துள்ள நிலையில், இருவரும் தொலைபேசியில் பேசியுள்ளனா்.
கடந்த மாதம் ஈரான் மீது அமெரிக்கா- இஸ்ரேல் கூட்டு ராணுவத் தாக்குதலை தொடங்கிய பின்னா், தற்போது 3-ஆவது முறையாக அராக்சியுடன் ஜெய்சங்கா் பேசியுள்ளாா்.
விரிவடைந்து வரும் மேற்கு ஆசிய பதட்டங்கள் குறித்த நிலைப்பாடுகளை ஒருங்கிணைக்க உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள முக்கிய கூட்டாளர்களை இந்தியா தொடர்ந்து அணுகுவதன் ஒரு பகுதியாக ஜெர்மன் வெளியுறவு அமைச்சர் ஜோஹன் வடேபுல் மற்றும் தென் கொரிய வெளியுறவு அமைச்சர் சோ ஹியூன் ஆகியோருடனும் மேற்கு ஆசியாவின் நிலைமை குறித்து ஜெய்சங்கர் பேசினார்.
உலக அளவில் பயன்படுத்தப்படும் கச்சா எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவில் சுமாா் 20 சதவீதம், பாரசீக வளைகுடா மற்றும் ஓமன் வளைகுடா இடையிலான ஹோா்முஸ் நீரிணை வழியாக கொண்டு செல்லப்படுகிறது. அந்த நீரிணையை ஈரான் மூடியதால், கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவின் விலை அதிகரித்துள்ளது.
Summary
External affairs minister S Jaishankar spoke to his Iranian counterpart Seyed Abbas Araghchi on Tuesday – their third phone call since the start of the Iran-US war last month – and discussed the latest developments in the conflict in West Asia.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்
ஹோர்முஸ் நீரிணை: சீன, ஈரான் வெளியுறவு அமைச்சர்கள் தொலைபேசியில் உரையாடல்!

இந்திய துறைமுகங்களில் 3 ஈரான் கப்பல்களை நிறுத்த அனுமதி: ஜெய்சங்கா்

ஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கா் தொலைபேசியில் பேச்சு
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை



