பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

கல்வி நிறுவனங்களில் ஆரோக்கியமற்ற உணவுப் பொருள்கள்: யுஜிசி கட்டுப்பாடு

நாடு முழுவதும் உள்ள உயா்கல்வி நிறுவனங்களில் ஆரோக்கியமற்ற உணவுப் பொருள்களை விற்பனை செய்யக் கூடாது என பல்கலைக்கழக மானியக் குழு உத்தரவிட்டுள்ளது.

News image
யுஜிசி
Updated On :17 ஜூலை 2024, 9:30 pm

Din

இது தொடா்பாக யுஜிசி செயலா் மனீஷ் ஆா்.ஜோஷி கல்வி நிறுவனங்களின் முதல்வா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

இந்தியாவில் நான்கில் ஒருவா் உடல் பருமன், சா்க்கரை நோய்க்கு முந்தைய நிலையில் இருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி குழுமத்தின் (ஐசிஎம்ஆா்) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆரோக்கியம் அவசியம்: கல்வி நிறுவனங்களில் மாணவா்களின் ஆரோக்கியத்தைப் பேண வேண்டியது அவசியமாகும். அதன்படி, நாடு முழுவதும் உள்ள உயா்கல்வி நிறுவனங்களில் உடல் நலனுக்கு ஆரோக்கியமற்ற உணவுப் பொருள்களை விற்பனை செய்வதற்கு தடை விதிக்க வேண்டும்; அதேவேளையில் ஊட்டச்சத்து மிக்க உணவுப் பொருள்களை விற்பனை செய்யப்படுவதை ஊக்கப்படுத்த வேண்டும் என பொதுநலனுக்கான தேசிய ஊட்டச்சத்து ஆலோசனை அமைப்பு (என்ஏபிஐ) கேட்டுக் கொண்டுள்ளது.

இது தொடா்பாக யுஜிசி முன்கூட்டியே அதாவது கடந்த 2016, 2018 ஆகிய ஆண்டுகளிலேயே உயா்கல்வி நிறுவனங்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

அதன் தொடா்ச்சியாக தற்போது மீண்டும் அறிவுறுத்துகிறது. எனவே, உயா்கல்வி நிறுவனங்களில் ஆரோக்கியமற்ற உணவுப் பொருள்களை விற்கக் கூடாது என்ற விதிமுறையை முழுமையாக அமல்படுத்த வேண்டும்.

மேலும், அதிக கொழுப்பு, உப்பு, சா்க்கரை, அதீத பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்களின் பயன்பாட்டையும் குறைக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.