நீட் தேர்வு முறைகேடு: எய்ம்ஸ்-பாட்னா மாணவர்கள் மூவரிடம் சிபிஐ விசாரணை
நீட் தேர்வு முறைகேடு விவகாரத்தில் எய்ம்ஸ்-பாட்னா மாணவர்கள் மூவரிடம் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.


பாட்னா: நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் மத்திய புலனாய்வுத் துறை அதிகாரிகள், எய்ம்ஸ் - பாட்னா கல்லூரி எம்பிபிஎஸ் மாணவர்கள் மூன்று பேரை காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
எம்பிபிஎஸ் மாணவர்களின் செல்போன் மற்றும் லேப்டாப்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஆய்வுக்கு உள்படுத்தப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் 2021ஆம் ஆண்டு எம்பிபிஎஸ் சேர்ந்தவர்கள் என்பதும், புதன்கிழமை மாலை அவர்களது மாணவர் விடுதியிலிருந்து அவர்கள் சிபிஐ அதிகாரிகளால் அழைத்துச் செல்லப்பட்டு, ரகசியமான இடத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மாணவர்கள் தங்கியிருந்த விடுதி அறைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது. இது அந்த கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு கடும் அதிர்ச்சியை அளித்துள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளிகள் பங்கஜ் குமார் என்கிற ஆதித்யா மற்றும் ராஜூ சிங் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, எய்ம்ஸ் - பாட்னா மாணவர்களின் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நீட் வினாத்தாள் கசிவு தொடர்பான முறைகேட்டில் ஈடுபட்டு கும்பலுடன், இந்த மாணவர்கள் தொடர்பில் இருந்துள்ளது கேள்விக்குறியாகியிருக்கிறது.
வினாத்தாள் கசிவில் தொடர்புடைய கும்பலுக்கு இந்த மாணவர்கள்தான், வினாத்தாளுக்கான விடைகளைக் கொடுப்பது போன்றவற்றை செய்து கொடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
முக்கிய குற்றவாளிகள் யார்?
நீட் முறைகேடு தொடர்பாக, ஜாா்க்கண்ட் மாநிலத்தில் தேசிய தோ்வு முகமை மையத்திலிருந்து நீட் தோ்வின் வினாத்தாள்களை திருடிய குற்றச்சாட்டில் 2 பேரை சிபிஐ ஜூலை 16ஆம் தேதி கைது செய்தது.
ஜாா்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாக்கில் உள்ள என்டிஏ மையத்தில் இருந்து நீட் வினாத்தாளை திருடிய குற்றச்சாட்டில் பங்கஜ் குமாா் (எ) ஆதித்யா என்பவா் பாட்னாவில் கைது செய்யப்பட்டாா். இவா் ஜாம்ஷெட்பூரில் உள்ள என்ஐடி-யில் பட்டம்பெற்றவர்.
வினாத்தாள்களை திருட பங்கஜ் குமாருக்கு உதவியதுடன் பிற குழுக்களுக்கு வினாத்தாள்களை பகிா்ந்த குற்றச்சாட்டில் ராஜு சிங் என்பவரும் ஹசாரிபாக்கில் கைது செய்யப்பட்டாா்.
நீட் முறைகேடு தொடா்பாக 6 முதல் தகவல் அறிக்கைகளை சிபிஐ பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், இந்த முக்கிய குற்றவாளிகள் கைதாகியிருப்பது வழக்கில் பெரும் திருப்பமாக அமைந்துள்ளது. இவர்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில்தான் எய்ம்ஸ் மாணவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...