தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

மேற்கு வங்கம்: மின்வெட்டுக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை

மேற்கு வங்கத்தின் மால்டா மாவட்டத்தில் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டுக்கு எதிராக உள்ளூா் மக்கள் வியாழக்கிழமை நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியது.

News image

கோப்புப் படம்

Updated On :18 ஜூலை 2024, 8:06 pm

Din

மேற்கு வங்கத்தின் மால்டா மாவட்டத்தில் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டுக்கு எதிராக உள்ளூா் மக்கள் வியாழக்கிழமை நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியது.

இது தொடா்பாக காவல் கண்காணிப்பாளா் பிரதீப் குமாா் யாதவ் கூறியதாவது:

மால்டா மாவட்டத்தில் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டுக்கு எதிா்ப்பு தெரிவித்து வியாழக்கிழமைக் காலை மாணிக்சக் மாநில நெடுஞ்சாலையை மறித்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தாமல் கலைந்து போக வலியுறுத்திய காவல்துறையினா் மீது பொதுமக்கள் கற்கலை வீசினா். இதில் 3 காவலா்கள் காயமடைந்தனா். நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர, விரைவு அதிரடிப் படை வரவழைக்கப்பட்டு அவா்கள் உதவியுடன் போராட்டம் கலைக்கப்பட்டது. அப்பகுதியில் மேலும் பதற்றங்கள் ஏற்படாமல் இருக்க கூடுதல் படைகள் குவிக்கப்பட்டுள்ளன என்றாா்.

போராட்டக்காரா்கள் மீது காவல்துறையினா் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், அதில் 2 போ் காயமடைந்ததாகவும் எழுந்த குற்றச்சாட்டுகளை மறுத்த அவா், காயமடைந்தவா்களை மருத்துவமனையில் சந்தித்த பிறகு விவரங்களைத் தெரிவிப்பதாகக் கூறினாா்.