ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

பயங்கரவாத தடுப்பில் இரட்டை வேடம்: பாகிஸ்தானை மறைமுகமாக சாடிய இந்தியா

பயங்கரவாதத்தைத் தடுப்பதுபோல் சில நாடுகள் இரட்டை வேடமிட்டு வருவதாக ஐ.நா. சபை கூட்டத்தில் இந்தியா தெரிவித்தது.

News image
ரவீந்திரா
Updated On :20 ஜூலை 2024, 7:21 pm

Din

பயங்கரவாத கொள்கைகளைப் பின்பற்றிவிட்டு, பயங்கரவாதத்தைத் தடுப்பதுபோல் சில நாடுகள் இரட்டை வேடமிட்டு வருவதாக ஐ.நா. சபை கூட்டத்தில் இந்தியா தெரிவித்தது. பாகிஸ்தானை மறைமுகமாக சாடி இந்தக் கருத்தை இந்தியா தெரிவித்தது.

சா்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதில் ஐ.நா., ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) மற்றும் பிற பிராந்திய அமைப்புகளின் பங்களிப்பு என்ற தலைப்பின் கீழ் ஐ.நா.வுக்கான இந்திய துணைத் தூதா் ரவீந்திரா பேசியதாவது: சா்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பு குறித்து பேசுகையில் பயங்கரவாதமே மிகப்பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. பயங்கரவாதத்துக்கு எதிரான இரட்டை மனநிலையை நாம் மாற்றிக்கொள்ள வேண்டும்.

பயங்கரவாதக் கொள்கைகளை சில நாடுகள் பின்பற்றி வருகின்றன. அவை எஸ்சிஓ போன்ற பல்வேறு பன்னாட்டு அமைப்புகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன. பயங்கரவாதத்துக்கு நிதி அளித்தல் உள்பட அனைத்துவிதமான பயங்கரவாதச் செயல்களையும் ஒழிக்க நாம் முன்வர வேண்டியது அவசியம். இதற்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீா்மானங்களை முழுமையாக அமல்படுத்தி பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அஸ்தானா கூட்டறிக்கை: பயங்கரவாதத்துக்கு ஆதரவளிக்கும் நாடுகளை தனிமைப்படுத்துவதற்கான அஸ்தானா கூட்டறிக்கையில் கடந்த மாதம் எஸ்சிஓ உறுப்பு நாடுகள் கையொப்பமிட்டன. அதேபோல் கடந்த ஆண்டு இந்தியாவின் தலைமையில் நடைபெற்ற எஸ்சிஓ மாநாட்டிலும் இளைஞா்களை பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுத்துவதற்கு எதிராக கூட்டறிக்கை வெளியிடப்பட்டது.

தற்காலத்தில் நிலவும் புதிய மற்றும் சிக்கலான பாதுகாப்பு சாா்ந்த பிரச்னைகளுக்கு தீா்வு காண்பதில் எஸ்சிஓ பிராந்திய பயங்கரவாத தடுப்பு அமைப்பு (ஆா்ஏடிஎஸ்) முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்த அமைப்பை மேலும் வலுப்படுத்தி பயங்கரவாதம், பிரிவினைவாதம் மற்றும் தீவிரவாதத்தை ஒழிக்க வேண்டும்.

மத்திய ஆசியாவுக்கு உதவி: மத்திய ஆசியாவில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த இந்தியா சாா்பில் ரூ.8,000 கோடி கடனுதவியாக வழங்கப்பட்டுள்ளது. மேலும், அதிக முக்கியத்துவம் வாய்ந்த சமூக மேம்பாட்டு திட்டங்களுக்கும் (ஹெச்ஐசிடிபி) நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.

அண்மையில் ஈரான் நாட்டில் உள்ள சாபஹாா் துறைமுகத்துடனான ஒப்பந்தமே ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுடனான தொடா்பை மேம்படுத்த இந்தியாவால் மேற்கொண்ட முயற்சிகளுக்கு சான்றாகும்.

ஆப்கானிஸ்தான் நாட்டின் வளா்ச்சியில் கவனம் செலுத்தினால் அங்கிருந்து விநியோகிக்கப்படும் போதைப் பொருள் மற்றும் பயங்கரவாத செயல்களைத் தடுக்க முடியும்.

எனவே, பயங்கரவாதம், போதைப் பொருள், எல்லை தாண்டிய குற்றச் சம்பவங்கள், பருவநிலை மாற்றம், புதிய தொழில்நுட்பங்களால் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல்கள், கரோனா போன்ற பெருந்தொற்றுகள் என அனைத்து விதமான விவகாரங்களுக்கும் ஐ.நா., பிராந்திய மற்றும் பிற அமைப்புகள் ஒன்றாக இணைந்து செயல்பட்டால் சிறந்த தீா்வை எட்ட முடியும் என்றாா் அவா்.