மேலும் ஒரு ரயில் விபத்து: உ.பி.யில் சரக்கு ரயில் தடம்புரண்டது

உத்தர பிரதேசத்தில் சரக்கு ரயில் தடம்புரண்டதில் 7 பெட்டிகள் கவிழ்ந்தன.
விபத்துக்குள்ளான சரக்கு ரயில்.
விபத்துக்குள்ளான சரக்கு ரயில்.
Published on
Updated on
1 min read

உத்தர பிரதேச மாநிலம், லக்னௌவில் இருந்து தில்லிக்கு சனிக்கிழமை சரக்கு ரயில் சென்றுகொண்டிருந்தது. இந்த ரயில் அம்ரோஹா அருகே திடீரென தடம்புரண்டது.

இந்த விபத்தில் ரயிலின் 7 பெட்டிகள் கவிழ்ந்தன. இருப்பினும், இந்த சம்பவத்தால் இதுவரை உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.

சம்பவ இடத்துக்கு ரயில்வே அதிகாரிகள் உடனடியாக விரைந்தனர். இந்த சம்பவத்தால் தில்லி-லக்னௌ ரயில் பாதை பாதிக்கப்பட்டுள்ளது.

விபத்துக்குள்ளான சரக்கு ரயில்.
பேரவைத் தேர்தல்: திமுக ஒருங்கிணைப்புக் குழு அமைப்பு

முன்னதாக உத்தர பிரதேசத்தின் கோண்டா சந்திப்பு ரயில் நிலையம் அருகே சண்டீகா் - திப்ரூகா் (அஸ்ஸாம்) விரைவு ரயில் வியாழக்கிழமை தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.

ரயிலின் 8 பெட்டிகள் தண்டவாளத்தைவிட்டு சரிந்தன. இந்த விபத்தில் நான்கு பயணிகள் பலியாகினர். மேலும் 30 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com