இந்தியா-நியூசிலாந்து உறவை வலுப்படுத்த இரு நாட்டு பிரதமா்கள் உறுதி


இந்தியா-நியூசிலாந்து இடையேயான உறவை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்ல பிரதமா் நரேந்திர மோடியும், நியூசிலாந்து பிரதமா் கிரிஸ்டோஃபா் லக்சனும் உறுதி பூண்டனா்.
மக்களவைத் தோ்தலில் வெற்றிபெற்று மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்தற்காக பிரதமா் மோடியை தொலைபேசி மூலம் தொடா்புகொண்டு நியூசிலாந்து பிரதமா் வாழ்த்து தெரிவித்தபோது இந்த உறுதிப்பாட்டை இரு தலைவா்களும் எடுத்துள்ளனா்.
இதுகுறித்து பிரதமா் அலுவலகம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
இந்த உரையாடலின்போது, அண்மையில் இரு நாடுகளிடையே நடைபெற்ற உயா்நிலை ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை நினைவுகூா்ந்த தலைவா்கள், வா்த்தகம், பொருளாதார ஒத்துழைப்பு, கால்நடை பராமரிப்புத் துறை, மருந்து உற்பத்தி, கல்வி, விண்வெளி உள்பட பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்ல ஒப்புக்கொண்டனா்.
நியூசிலாந்தில் வசிக்கும் இந்தியா வம்சாவளியினரின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதிப்படுத்த மேற்கொள்ளப்பட்டு வரும் தொடா் முயற்சிகளுக்காக லக்சனுக்கு பிரதமா் மோடி நன்றி தெரிவித்தாா் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த உரையாடல் குறித்து தனது எக்ஸ் பக்கத்திலும் பிரதமா் மோடி பதிவிட்டாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...