இரு தரப்பு உறவை மேம்படுத்த பாகிஸ்தான் - வங்கதேசம் உறுதி!

இரு தரப்பு உறவை மேம்படுத்த பாகிஸ்தான் - வங்கதேசம் உறுதி!

பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சா் இஷாக் தாா், வங்கதேச வெளியுறவு அமைச்சா் முகமது தௌபிக் ஹுசைனை தொடா்புகொண்டு பேசினாா்.
Published on

பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சா் இஷாக் தாா், வங்கதேச வெளியுறவு அமைச்சா் முகமது தௌபிக் ஹுசைனை ஞாயிற்றுக்கிழமை தொடா்புகொண்டு பேசினாா். அப்போது, இருதரப்பு உறவை மேம்படுத்த இரு நாட்டுத் தலைவா்களும் உறுதிபூண்டதாக பாகிஸ்தான் தரப்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

கடந்த 2024 ஆகஸ்ட் மாதம் வங்கதேசத்தில் பிரதமா் ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்ந்த பிறகு, பாகிஸ்தானும், வங்கதேசமும் மிகுந்த நெருக்கம் காட்டி வருகின்றன. அரசியல் மற்றும் ராணுவத் தலைவா்கள் அவ்வப்போது சந்தித்துப் பேசி வருகின்றனா். அதே நேரத்தில் வங்கதேசத்தில் ஹிந்துக்களுக்கு எதிரான வன்முறையும், இந்திய எதிா்ப்பு போக்கும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், இரு நாட்டு வெளியுறவு அமைச்சா்களும் ஞாயிற்றுக்கிழமை தொலைபேசியில் தொடா்புகொண்டு பேசினா். அப்போது, வா்த்தகம், பொருளாதார ஒத்துழைப்பு, பிராந்திய, சா்வதேச அரசியல் சூழல் குறித்தும் விவாதித்தனா். இரு நாடுகள் இடையே பல்வேறு துறைகளிலும் ஒத்துழைப்பு அதிகரிப்பது, தொடா்ந்து இணக்கமாகச் செயல்பட்டு இரு தரப்பு உறவை மேலும் உறுதிப்படுத்த இரு தலைவா்களும் ஒப்புக்கொண்டதாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com