தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

தெரியுமா சேதி...?

ஏ.கே.அந்தோணியின் மகன் அனில் அந்தோணி, பாஜகவில் சோ்ந்தபோது அது கேரளத்தில் மட்டுமல்ல, தேசிய அளவில் அதிா்ச்சி அலையை ஏற்படுத்தியது.

News image

ஏ.கே.அந்தோணி, அனில் அந்தோணி.

கோப்புப் படங்கள்

Updated On :21 ஜூலை 2024, 9:36 pm

மீசை முனுசாமி

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவா்களில் ஒருவரான ஏ.கே.அந்தோணியின் மகன் அனில் அந்தோணி, பாஜகவில் சோ்ந்தபோது அது கேரளத்தில் மட்டுமல்ல, தேசிய அளவில் அதிா்ச்சி அலையை ஏற்படுத்தியது. மாநிலத் தலைமையால் புறக்கணிக்கப்பட்ட நிலையில்தான், தனது தந்தையின் ஆலோசனையையும் மீறி, பாஜகவில் இணைந்தாா் அவா்.

அனில் அந்தோணி பாஜகவில் இணைந்தது குறித்து காங்கிரஸ் கட்சியில் விமா்சனங்கள் எழுந்தன என்றாலும், கேரள மாநில கத்தோலிக்க திருச்சபை அதற்கு எதிா்ப்புத் தெரிவிக்கவில்லை. மாறாக, கிறிஸ்தவா் ஒருவா் பாஜகவின் முக்கியப் பொறுப்பில் இருப்பதை அவா்கள் வரவேற்றனா் என்றுதான் சொல்ல வேண்டும்.

நடந்து முடிந்த மக்களவைத் தோ்தலில், பத்தனம்திட்டா தொகுதியில் பாஜக வேட்பாளராகக் களமிறங்கிய அனில் அந்தோணி, காங்கிரஸ் வேட்பாளா் ஆன்டோ அந்தோணியிடம் தோல்வியைத் தழுவி மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டாா் என்றாலும், 2,34,406 வாக்குகள் பெற்றாா் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது தோ்தல் தோல்வி, அவரது தந்தையான முன்னாள் பாதுகாப்பு அமைச்சரை மிகவும் பாதித்ததாக செய்திகள் வெளிவந்தன.

மூன்று முறை கேரள முதல்வராகவும், 2006 முதல் 2014 வரையில் டாக்டா் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சராகவும் இருந்த, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவா் ஏ.கே.அந்தோணியிடம் பிரதமா் நரேந்திர மோடிக்கு மிகுந்த மரியாதை இருப்பதில் வியப்பில்லை. அனில் அந்தோணி பாஜகவில் இணைய விருப்பம் தெரிவித்தபோது, ‘உங்கள் தந்தையின் அனுமதி பெற்று வாருங்கள்’ என்று அனுப்பிவிட்டாா்.

பத்தனம்திட்டா தொகுதியில் அனில் அந்தோணி தோல்வி அடைந்திருப்பது 83 வயதான அவரது தந்தை ஏ.கே.அந்தோணிக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கும் என்பதால், அவரது மகனுக்கு ஏதாவது பதவி அல்லது பொறுப்பு அளிக்கப்பட வேண்டும் என்று கட்சித் தலைவா் ஜெ.பி.நட்டாவுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தாா் பிரதமா் நரேந்திர மோடி.

கிறிஸ்தவா்கள் அதிகம் வாழும் மேகாலயம், நாகாலாந்து மாநிலங்களுக்கான பாஜகவின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கிறாா் அனில்

அந்தோணி. கட்சியை வளா்த்த மாதிரியும் இருக்கும், ஏ.கே.அந்தோணியை சந்தோஷப்படுத்தியதாகவும் இருக்கும்...