புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து! ஒரு வாரத்தில் 4வது!

மேற்கு வங்கத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டு இன்று விபத்துக்குள்ளானது.

News image

தடம் புரண்டு விபத்துக்குள்ளான சரக்கு ரயில்

படம்: எக்ஸ்

Updated On :21 ஜூலை 2024, 4:34 pm

DIN

மேற்கு வங்கத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டு இன்று (ஜூலை 21) விபத்துக்குள்ளானது.

சமீபத்தில் ரயில்கள் தடம் புரண்டு விபத்துக்குள்ளாவது அதிகரித்து வரும் நிலையில், மேற்கு வங்க மாநிலம் ரானாகட் பகுதியில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து நேரிட்டுள்ளது.

இதில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமையான இன்று (ஜூலை 21) மட்டும் சரக்கு ரயில் தடம் புரள்வது இரண்டாவது முறையாக நடந்துள்ளது.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் நான்காவது முறையாக ரயில் தடம் புரண்டு விபத்து நேரிட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் அல்வார் சரக்கு நிலையத்திலிருந்து ஹரியாணாவின் ரேவாரிக்கு சென்றுக்கொண்டிருந்த சரக்கு ரயில் ஒன்று, மதுரா அருகே தடம் புரண்டது. அதிகாலை 2.30 மணிக்கு இச்சம்பவம் நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். ரயில் தடம் புரண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இன்று இரண்டாவது முறையாக மற்றொரு சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து நேரிட்டுள்ளது. மேற்கு வங்க மாநிலம் ரானாகட் பகுதியிலுள்ள தண்டவாளத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டது.

இதில் உயிர் சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை எனவும், சீரமைப்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதேபோன்று, முன்னதாக கடந்த சனிக்கிழமை (ஜூலை 19 ) உத்தரப் பிரதேச மாநிலம், லக்னௌவில் இருந்து தில்லிக்கு புறப்பட்ட சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் 7 பெட்டிகள் தடம் புரண்டன.

இதற்கும் முன்பு, கடந்த வியாழக்கிழமை (ஜூலை 17) உத்தரப் பிரதேசத்தின் கோண்டா சந்திப்பு ரயில் நிலையம் அருகே சண்டீகா் - திப்ரூகா் (அஸ்ஸாம்) விரைவு ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.