எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

நீட் தேர்வை ரத்து செய்து, மறுதேர்வுக்கு உத்தரவிட முடியாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

News image
உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
Updated On :23 ஜூலை 2024, 12:18 pm

இணையதளச் செய்திப் பிரிவு

புது தில்லி: நடந்து முடிந்த நீட் தேர்வை ரத்து செய்ய போதுமான தரவுகள் இல்லை என்றும், நீட் தேர்வில் ஒட்டுமொத்த நடைமுறைகளையும் மீறும் வகையில் முறைகேடு நடைபெறவில்லை என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

எனவே, கடந்த மே மாதம் நடைபெற்ற நீட் தேர்வை ரத்து செய்து, மறுதேர்வுக்கு உத்தரவிட முடியாது என தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று இந்த தீர்ப்பை பிறப்பித்துள்ளது.

20 லட்சம் மாணவர்களின் எதிர்காலத்தைக் கவனத்தில் கொண்டு இந்த தீர்ப்பை வழங்குவதாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

ஐஐடி-சென்னை வழங்கிய நீட் தேர்வு குறித்த அறிக்கையை உச்ச நீதிமன்றம் ஆய்வு செய்திருக்கிறது என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது

உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், ஹசாரிபாக், பாட்னாவில் அமைக்கப்பட்ட தேர்வு மையங்களில் நடந்த முறைகேடுகள் மூலம் 155 பேர் பயனடைந்துள்ளனர். இந்தக் காரணத்துக்காக மறுதேர்வு நடத்தப்பட்டால் அது சுமார் 23 லட்சம் மாணவர்களை பாதிக்கும் என்று தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.