
தங்கம் வெள்ளி மீதான இறக்குமதி வரி குறைக்கப்படுவதாக பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
2024-25 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்கிறார். மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து நிர்மலா சீதாராமன் தொடர்ந்து உரையாற்றி வருகிறார். அவரது உரையில்,
தங்கம், வெள்ளி மீதான சுங்கவரி 6 சதவீதமாக குறைப்பு என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
தங்கம், வெள்ளிகளுக்கான சுங்கவரி 6 சதவீதம் ஆகவும், பிளாட்டினத்துக்கான இறக்குமதி வரி 6.4 சதவீதமாக குறைந்துள்ளது.
சுங்கவரி குறைக்கப்படுவதால் தங்கம், வெள்ளி விலை குறையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. தாமிரம் மற்றும் உருக்கு இறக்குமதி வரிகளும் குறைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.