தெற்கு காஷ்மீர் இமயமலையில் உள்ள அமர்நாத் குகைக் கோயிலில் இதுவரை 4.25 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் பனி லிங்கத்தைத் தரிசனம் செய்துள்ளனர்.
வருடாந்திர அமர்நாத் யாத்திரை ஜூன் 29-ம் தேதி தொடங்கியுள்ள நிலையில், குகைக் கோயிலைத் தரிசிக்க 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் கொண்ட புதிய குழு இன்று அதிகாலை புறப்பட்டுச் சென்றது.
மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் துணையுடன் 106 வாகனங்களில் 3,089 பேர் அடங்கிய 28வது குழு அதிகாலை 3.23க்கு பகவதி நகர் அடிப்படை முகாமிலிருந்து புறப்பட்டது.
இதில் 1,803 பக்தர்கள் பாரம்பரிய 48 கி.மீ பஹல்காம் வழியாகவும், 1,286 பேர் செங்குத்தான 14 கி.மி பால்டால் வழியைத் தேர்ந்தெடுத்துள்ளனர்
3,880 மீட்டர் உயரமுள்ள குகைக் கோயிலில் இயற்கையாக உருவான பனி லிங்கத்திற்கு ஏற்கனவே 4.25 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். கடந்தாண்டு 4.5 லட்சத்துக்கும் அதிகமானோர் தரிசித்தனர்.
ஜூன் 28ஆம் தேதி முதல் ஜம்முவில் இருந்து துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா முதல் குழுவைக் கொடியசைத்துத் துவக்கி வைத்ததிலிருந்து, 3,11,493 பக்தர்கள் ஜம்மு அடிப்படை முகாமிலிருந்து புறப்பட்டுள்ளனர்.
காஷ்மீரில் உள்ள பால்டால் மற்றும் பஹல்காம் அடிப்படை முகாம்களிலிருந்து தொடங்கிய 52 நாள் யாத்திரை ஆகஸ்ட் 19 ஆம் தேதி நிறைவடைகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

1,795 பக்தர்கள் அடங்கிய 23-வது குழு அமர்நாத் புறப்பட்டது! இதுவரை 4.40 லட்சம் பேர் தரிசனம்!

அமர்நாத் பக்தர்கள் சென்ற பேருந்து விபத்து: 39 பேர் காயம்!

அமர்நாத்: இதுவரை 3.45 லட்சம் பேர் தரிசனம்! 16-வது குழு புறப்பட்டது

அமர்நாத் யாத்திரை: இதுவரை 1.45 லட்சம் பக்தர்கள் தரிசனம்!
விடியோக்கள்
ரசிகர்களைக் கவர்ந்ததா மகுடம்? திரைவிமர்சனம்




