அமைச்சர் நிர்மலின் சர்ச்சைக்குரிய பேச்சு நீக்கம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலக பணிக்கான டெண்டர் வெளியீட்டில் விதிமீறல்!மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம்: மத்திய அமைச்சா் அதவாலே தகவல்எழும்பூா் ரயில் நிலைய மறுசீரமைப்பு: ரயில் சேவைகளில் மாற்றம்ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்: டிரம்ப் எச்சரிக்கைதேர்வுகள் ரத்து! மாணவர்கள் கோரிக்கையை ஏற்ற ஜார்க்கண்ட் அரசு!
/

1,795 பக்தர்கள் அடங்கிய 23-வது குழு அமர்நாத் புறப்பட்டது! இதுவரை 4.40 லட்சம் பேர் தரிசனம்!

அமர்நாத்துக்குப் புறப்பட்ட 23-வது குழு பற்றி..

News image

Amarnath Yatra

Updated On :30 ஜூலை 2026, 12:43 pm IST

தெற்கு காஷ்மீர் இமயமலையில் அமைந்துள்ள அமர்நாத் குகைக் கோயிலுக்கு 1,700-க்கும் மேற்பட்ட பக்தர்கள் அடங்கிய புதிய குழு இன்று ஜம்மு முகாமிலிருந்து புறப்பட்டுச் சென்றது.

நடப்பாண்டுக்கான அமர்நாத் புனித யாத்திரை தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், குகையில் உள்ள பனிலிங்கத்தை இதுவரை 4.40 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் வழிபட்டுள்ளனர்.

1,406 ஆண்கள், 389 பெண்கள் உள்பட 1,795 பக்தர்களைக் கொண்ட 23-வது குழுவினர், அதிகாலை 2.50 மணியளவில் பகவதி நகர் முகாமிலிருந்து 82 வாகனங்களில் பால்டால் நோக்கிப் புறப்பட்டனர் என்று அவர்கள் கூறினர்.

இன்றைய குழுவின் புறப்பாட்டுடன், வருடாந்திர யாத்திரைக்கான ஜம்மு முகாமிலிருந்து புறப்பட்ட பக்தர்களின் மொத்த எண்ணிக்கை 1.32.150 ஆக உயர்ந்துள்ளது.

யாத்திரைக்காகப் புறப்பட்ட குழுக்களிலேயே மிகச் சிறிய குழு இதுவாகும். புதன்கிழமையன்று 2,051 பக்தர்களும், செவ்வாய், திங்கள்கிழமைகளில் 3,029 மற்றும் 3,800 பக்தர்களும் ஜம்முவிலிருந்து கோயிலுக்குப் புறப்பட்டனர்.

புனித குகைக் கோயிலுக்கான 57 நாள்கள் கொண்ட இந்த வருடாந்திர யாத்திரை ஆகஸ்ட் 28-ஆம் தேதி நிறைவடையும் என்று திட்டமிடப்பட்டுள்ளது.

மோசமான வானிலை காரணமாக ஜூலை 19 முதல் ஜூலை 24 வரை ஆறு நாள்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த யாத்திரை, ஜூலை 25 அன்று மீண்டும் தொடங்கியது.

A batch of over 1,700 devotees left Jammu base camp for 3,880-metre-high cave shrine of Amarnath in South Kashmir himalayas amid multi-tier security escort on Thursday, officials said.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.