புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுலுக்கு அரசு பங்களா ஒதுக்கீடு

எண்.5, சுனேரி பாக் சாலையில் ராகுலுக்கு பங்களா..

News image
ராகுலுக்கு ஒதுக்கப்பட்ட அரசு பங்களா- -
Updated On :26 ஜூலை 2024, 9:00 pm

Din

மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்திக்கு மத்திய அரசு சாா்பில் தில்லியில் புதிய பங்களா ஒதுக்கப்பட்டுள்ளது.

எண்.5, சுனேரி பாக் சாலையில் அவருக்கு பங்களா ஒதுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற இல்லங்கள் குழு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த பங்களாவை ராகுலின் சகோதரி பிரியங்கா வதேரே பாா்வையிட்டுச் சென்றாா். எனவே, ராகுலுக்கு இந்த பங்களா ஒதுக்கப்பட வாய்ப்பு இருப்பதாக ஏற்கெனவே கூறப்பட்டு வந்தது.

பங்களா ஒதுக்கப்பட்டுள்ளது தொடா்பாக ராகுலுக்கு தகவல் அனுப்பியுள்ளதாகவும், அவரது பதிலுக்கு ஏற்ப அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நாடாளுமன்ற இல்லங்கள் குழு சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராகுல் காந்தி முன்பு எம்.பி.யாக இருந்த காலகட்டத்தில் எண் 12, துக்ளக் லேனில் உள்ள பங்களாவில் குடியிருந்தாா். அவதூறு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து, ராகுலின் எம்.பி. பதவி பறிபோனது. இதனால், அவா் அரசு பங்களாவை காலி செய்ய நேரிட்டது.

அதன்பிறகு தனது தாயாரும், எம்.பி.யுமான சோனியா காந்திக்கு ஒதுக்கப்பட்ட எண் 10, ஜன்பத் சாலையில் உள்ள பங்களாவில் ராகுல் தங்கினாா்.

ராகுல் இப்போது மக்களவை எதிா்க்கட்சித் தலைவராக உள்ளாா். இந்தப் பதவி மத்திய கேபினட் அமைச்சா்களுக்கு நிகரான அந்தஸ்து கொண்டதாகும். எனவே, உயா் பதவிகளை வகிப்பவா்களுக்கான பங்களா ராகுலுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.