

ஒடிஸாவில் பெண் பத்திரிகையாளரைக் கொன்ற கணவர் கைது செய்யப்பட்டார்.
ஒடிஸாவைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் மதுமிதா பரிடா கடந்த புதன்கிழமையில் (ஜூலை 26) ரயில் முன் பாய்ந்து உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து, மதுமிதா தற்கொலை செய்துகொண்டதாகக் கூறி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
ஆனால், நடத்தப்பட்ட விசாரணையில் மதுமிதா தற்கொலை செய்து கொள்ளவில்லை என்றும், அவரது கணவர் ஸ்ரீதர் ஜேனா தான் மதுமிதாவை ரயில் முன் தள்ளிவிட்டு கொலை செய்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து, ஸ்ரீதர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.
காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், விமானப்படையில் பணிபுரியும் ஸ்ரீதருக்கும், பத்திரிகையாளரான மதுமிதாவுக்கும் கடந்த மார்ச் மாதத்தில் தான் திருமணம் நடந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, ஸ்ரீதர் ராஜஸ்தானில் உள்ள தனது பணியிடத்திற்குச் சென்றுவிட்டு, கடந்த 12 நாள்களுக்கு முன்பு ஒரிஸா திரும்பியிருந்தார். இந்நிலையில், ஸ்ரீதருக்கு வேறொருவருடன் தொடர்பு இருப்பதாகக் கூறி, இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
ஆனால், ஸ்ரீதர் மீதான குற்றச்சாட்டை அவர் மறுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து, ஸ்ரீதர் மீது மதுமிதாவும் அவரது தாயாரும் சேர்ந்து காவல்நிலையத்தில் கடந்த ஜூலை 24ஆம் தேதியில் புகார் அளித்திருந்தனர் என்பது தெரியவந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.