வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

நீதி ஆயோக் கூட்டத்தில் மம்தா பானர்ஜி பங்கேற்பு!

எதிர்க்கட்சித் தலைவர்கள் நீதி ஆயோக் கூட்டத்தைப் புறக்கணித்து வரும் நிலையில் மம்தா பானர்ஜி பங்கேற்பு

News image
கோப்புப் படம்
Updated On :26 ஜூலை 2024, 10:40 am

DIN

நீதி ஆயோக் கூட்டத்தில் கூட்டத்தில் பங்கேற்கவிருப்பதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

கடந்த ஜூலை 23ஆம் தேதியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டைத் தாக்கல் செய்திருந்தார்.

தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு எதிராக பாகுபாடு காட்டப்படுவதாகக் கூறி, காங்கிரஸ் கட்சி முதல்வர்கள் உள்ளிட்டோர், நீதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்கப் போவதாக அறிவித்தனர். அதாவது, நாளை (ஜுலை 27) நடைபெறவுள்ள நீதி ஆயோக் கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் பங்கேற்கப் போவதில்லை என்று அறிவித்துள்ளனர்.

இருப்பினும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி நாளைய நீதி ஆயோக் கூட்டத்தில் கூட்டத்தில் பங்கேற்பதற்காக தில்லி செல்வதற்காக இன்று பிற்பகலில் கொல்கத்தா விமான நிலையம் சென்றார்.

விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொண்டு மத்திய பட்ஜெட்டில் உள்ள பாகுபாட்டிற்கு தனது எதிர்ப்பை பதிவு செய்ய இந்த வாய்ப்பைப் பயன்படுத்த இருப்பதாகக் கூறினார். கூட்டத்தில் தனது விவாதத்தை ஏற்றுக்கொள்ளாவிடில், வெளிநடப்பு செய்யவிருப்பதாகவும் கூறினார்.

மம்தா பானர்ஜி நேற்றே தில்லிக்கு பயணம் மேற்கொள்வதாக இருந்தது; ஆனால், கடைசி நேரத்தில் பயணம் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நீதி ஆயோக் கூட்டத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், கர்நாடக முதல்வர் சித்தராமையா, இமாச்சலப் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு, தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி ஆகியோர் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.