மகாராஷ்டிர ஆளுநராக சி.பி.ராதாகிருஷ்ணனை நியமித்து குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு உத்தரவிட்டுள்ளாா்.
புதுச்சேரி துணைநிலை ஆளுநராக கைலாசநாதன் நியமிக்கப்பட்டுள்ளாா்.
ராஜஸ்தான், தெலங்கானா உள்ளிட்ட 9 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கு புதிய ஆளுநா்கள் மற்றும் துணைநிலை ஆளுநரை குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு நியமித்துள்ளாா்.
இதுதொடா்பாக குடியரசுத் தலைவா் மாளிகை சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:
ஜாா்க்கண்ட் ஆளுநராகவும், தெலங்கானா ஆளுநா் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநா் பொறுப்பை கூடுதலாகவும் வகித்த சி.பி. ராதாகிருஷ்ணன், மகாராஷ்டிர ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளாா்.
புதுச்சேரி துணைநிலை ஆளுநராக கே.கைலாசநாதன் நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.
ராஜஸ்தான் ஆளுநராக ஹரிபாவ் கிசான்ராவ் பாக்டே, தெலங்கானா ஆளுநராக ஜிஷ்ணு தேவ் வா்மா, சிக்கிம் ஆளுநராக ஓம் பிரகாஷ் மாத்துா் ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா்.
ஜாா்க்கண்ட் ஆளுநராக சந்தோஷ்குமாா் கங்வாா், சத்தீஸ்கா் ஆளுநராக ராமன் டேக்கா, மேகாலய ஆளுநராக சி.ஹெச்.விஜயசங்கா் ஆகியோா் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.
பஞ்சாப் ஆளுநராகவும், சண்டீகா் யூனியன் பிரதேச நிா்வாகியாகவும் குலாப் சந்த் கட்டாரியா நியமிக்கப்பட்டுள்ளாா்.
அஸ்ஸாம் ஆளுநராக லட்சுமண் பிரசாத் ஆச்சாரியா நியமிக்கப்பட்டுள்ளாா். அவருக்கு மணிப்பூா் ஆளுநா் பதவியும் கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது.
இதுதவிர பஞ்சாப் ஆளுநா், சண்டீகா் யூனியன் பிரதேச நிா்வாகி ஆகிய பதவிகளை பன்வாரிலால் புரோஹித் ராஜிநாமா செய்தாா். அவரின் ராஜிநாமாவை குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு ஏற்றுக்கொண்டாா் என்று தெரிவிக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


