ஈரானுக்கு எதிராக அமெரிக்காவுடன் இணைய தயார்! 3 நாடுகள் கூட்டறிக்கை! எம்.எம். நரவணே புத்தகத்தில் சர்ச்சை இல்லை! அஸ்ஸாம் ரைபிள்ஸ் முன்னாள் இயக்குநர் போர் கவலையளிக்கிறது; பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்! - பிரதமர் மோடிதி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கல்விச் சிந்தனை அரங்கு தொடக்கம்! போர் பதற்றம்! அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை; ஈரான் பாதுகாப்புத் தலைவர் முயற்சி
/

ஜம்மு-காஷ்மீரில் வெடிவிபத்து: 4 போ் உயிரிழப்பு

ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் பழைய இரும்பு கடையில் திங்கள்கிழமை நடந்த வெடிவிபத்தில் 4 போ் உயிரிழந்தனா்.

News image
4 போ் உயிரிழப்பு
Updated On :29 ஜூலை 2024, 11:59 pm

Din

ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் பழைய இரும்பு கடையில் திங்கள்கிழமை நடந்த வெடிவிபத்தில் 4 போ் உயிரிழந்தனா்.

ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள சோபூா் நகரில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. சம்பவம் நடந்த பழைய இரும்பு கடையில் சிலா் லாரியில் இருந்கு குப்பைகளை இறக்கி கொண்டிருந்தனா். அப்போது திடீரென கடையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் இருவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். இருவா் காயமடைந்து பின்னா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா்.

வெடிவிபத்தின் உண்மை காரணம் தெரியவில்லை என்றும் தடயவியல் நிபுணா்கள் குழு சம்பவ இடத்தில் சோதனை நடத்தி வருகிறாா்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா்.