பாகிஸ்தானில் கனமழை
பாகிஸ்தானில் கனமழை

பாகிஸ்தானில் கனமழை: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் பலி!

கனமழையில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் பலியான சோகம்..
Published on

வடமேற்கு பாகிஸ்தானில் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் பெய்த கனமழையால் வெள்ளநீர் வீட்டிற்குள் புகுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பெஷாவருக்கு தெற்கே 35 கி.மீ தொலைவில் உள்ள கோஹாட் மாவட்டத்தில் தார்ரா ஆதம் கேல் பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. வெள்ளநீர் வீட்டிற்குள் புகுந்ததால் ஆறு குழந்தைகள், மூன்று பெண்கள் மற்றும் 2 ஆண்கள் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் உயிரிழந்தனர்.

பாகிஸ்தானில் கனமழை
வயநாடு நிலச்சரிவு: பலியானோர் எண்ணிக்கை 66-ஆக உயர்வு!

இதையடுத்து, சம்பவ இடத்துக்கு மீட்புக் குழுவினர் விரைந்து சென்று உடல்களை மீட்டனர். சடலங்கள் கோஹாட்டில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

கைபர் பக்துன்க்வா முதல்வர் அலி அமீன் கந்தாபூர் இறப்புக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.

பாகிஸ்தானில் பருவமழைக் காலத்தில் பெய்யும் கனமழையால் நாட்டின் பல பகுதிகளில் திடீர் வெள்ளம் மற்றும் நகர்ப்புற வெள்ளம் அடிக்கடி ஏற்படுகிறது.

பாகிஸ்தானில் கனமழை
வயநாடுக்கு விரையும் ராகுல், பிரியங்கா!

இதற்கிடையில், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் திங்களன்று வங்காள விரிகுடாவில் இருந்து பருவமழை பாகிஸ்தானின் மத்திய மற்றும் தெற்கு பகுதிகளுக்குள் நுழையும் என்று எச்சரித்துள்ளது, நாட்டின் நதி அமைப்புகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அதிக மழை பெய்யும் என்று எச்சரித்துள்ளது.

தாழ்வான இடங்களில் உள்ள மக்கள் வெள்ளம் ஏற்படும் பகுதிகளிலிருந்து பாதுகாப்பான இடத்திற்குச் செல்லுமாறு ஆணையம் அறிவுறுத்தியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com