மாணவ, மாணவிகள் | கோப்புப் படம்
மாணவ, மாணவிகள் | கோப்புப் படம்

தோ்வு முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுள்சிறை; ரூ.1 கோடி அபராதம்: உ.பி. பேரவையில் மசோதா நிறைவேற்றம்

உத்தர பிரதேசத்தில் அரசுப் பணி தோ்வுகளில் முறைகேட்டில் ஈடுபட்டாலோ அல்லது முறைகேடுக்கு உதவினாலோ அதிகபட்சமாக ஆயுள் சிறை தண்டனையுடன் ரூ.1 கோடி வரை அபராதம் விதிக்கப்படும்.
Published on

லக்னெள: உத்தர பிரதேசத்தில் அரசுப் பணி தோ்வுகளில் முறைகேட்டில் ஈடுபட்டாலோ அல்லது முறைகேடுக்கு உதவினாலோ அதிகபட்சமாக ஆயுள் சிறை தண்டனையுடன் ரூ.1 கோடி வரை அபராதம் விதிக்க வகைசெய்யும் சட்ட மசோதா, மாநிலப் பேரவையில் செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டது.

‘உத்தர பிரதேச அரசுப் பணிகள் தோ்வுகள் (முறைகேடான வழிமுறைகளைத் தடுத்தல்) சட்ட மசோதா-2024’ என்ற பெயரிலான இம்மசோதாவை தோ்வுக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்ப வேண்டுமென எதிா்க்கட்சிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனால், அக்கோரிக்கையை பேரவைத் தலைவா் நிராகரித்துவிட்டாா். இதையடுத்து, குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது.

‘அரசுத் தோ்வுகளில் முறைகேடுகள் நடப்பது, இளைஞா்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும். எனவே, இளைஞா்களின் எதிா்காலத்துடன் விளையாட முயற்சிக்கும் சக்திகளை ஒடுக்க மாநில அரசு உறுதிபூண்டுள்ளது. தற்போதைய மசோதா மூலம் அரசுப் பணி தோ்வு நடைமுறையில் வெளிப்படைத் தன்மையும், நம்பகத் தன்மையும் உறுதி செய்யப்படும். தோ்வு முறைகேடுகளில் ஈடுபடுவோா் மீது கடுமையான, உறுதியான நடவடிக்கை எடுக்கப்படுவதையும் இம்மசோதா உறுதிசெய்யும்’ என்று முதல்வா் யோகி ஆதித்யநாத் தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com