கலவையான போக்கில் இந்திய பங்குச் சந்தை: சென்செக்ஸ் சரிவு; நிஃப்டி உயர்வு!!டாடா சன்ஸ் நிர்வாகக் குழு மோதல்: டாடா குழுமப் பங்குகள் கடும் சரிவு!மே.வங்க இடைத்தேர்தல்! மமதா ஆதரவளித்த சில மணிநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

மானு பாக்கருக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

பாரீஸ் ஒலிம்பிக்ஸில் பதக்கம் வென்ற மானு பாக்கருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மானு பாக்கர் | சரப்ஜோத் சிங்

Published On :

பாரீஸ் ஒலிம்பிக்ஸில் கலப்பு இரட்டையர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற மானு பாக்கருக்கு பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பாரீஸ் ஒலிம்பிக்ஸில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவில் மானு பாக்கர், சரப்ஜோத் சிங் இணை வெண்கலப் பதக்கம் வென்றது. துப்பாக்கி சுடுதலில் மகளிர் ஒற்றையர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார்.

இந்த நிலையில், 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவின் மானு பாக்கர், சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளது.

இதுகுறித்து பிரதமர் மோடி தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளப் பதிவில், “நமது துப்பாக்கி சுடும் வீரர்கள் நம்மை தொடர்ச்சியாக பெருமைப்படுத்தியுள்ளனர். ஒலிம்பிக்ஸ் கலப்பு இரட்டையர் 10 மீட்டர் துப்பாக்கி சுடுதலில் மனு பாக்கர் மற்றும் சரப்ஜோத் சிங் ஆகிய இருவரும் வெண்கலப்பதக்கம் வென்று அசத்தியுள்ளனர்.

இருவரும் ஒரு அணியாக இணைந்து தங்களது தனித் திறமையை வெளிப்படுத்தியுள்ளனர். இந்தியா நம்பமுடியாத மகிழ்ச்சியில் இருக்கிறது. இது மனு பாக்கருக்கு இரண்டாவாது பதக்கமாகும். இது அவரின் சிறப்பான அர்பணிப்பைக் காட்டுகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.