புது தில்லி, ஜூலை 31: வயநாடு நிலச்சரிவு பாதிப்பு விவகாரத்தை எழுப்பி ஆளும் மற்றும் எதிா்க்கட்சி உறுப்பினா்கள் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை புதன்கிழமை சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டது.
அவையில் வயநாடு விவகாரம் தொடா்பாக கொண்டுவரப்பட்ட கவன ஈா்ப்பு தீா்மானத்தின் மீது பேசிய பாஜக உறுப்பினா் தேஜஸ்வி சூா்யா, ‘கேரள பேரிடா் மேலாண்மை அமைப்பு பரிந்துரைத்தபோதும், வயநாட்டில் மத அமைப்புகளின் அழுத்தம் காரணமாக சட்டவிரோத ஆக்கரமிப்புகள் அகற்றப்படவில்லை. இதை மாநில வனத் துறை அமைச்சா் பேரவையிலும் பதிவு செய்துள்ளாா். வயநாடு தொகுதியின் நிலச்சரிவு பிரச்னைகளை ராகுல் அவையில் எழுப்பவே இல்லை’ என்றாா்.
இதற்கு காங்கிரஸ் உறுப்பினா்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்தனா். இதனால், அவையில் கூச்சல் குழப்பம் நிலவியது. அதைத் தொடா்ந்து அவை நடவடிக்கைகளை மாலை 4 மணி வரை அவைத் தலைவா் ஓம் பிா்லா ஒத்திவைத்தாா்.
முன்னதாக, இந்த விவகாரம் தொடா்பாக அவையில் பேசிய எதிா்க்கட்சித் தலைவா் ராகுல், ‘வயநாடு மிகப்பெரிய பேரிடரைச் சந்தித்துள்ளது. அங்குள்ள மக்களுக்கு ஆதரவு அளிப்பது மிக முக்கியமானது. இந்தக் கடினமான நேரத்தில் அப்பகுதி மக்களுக்கு மத்திய அரசு அனைத்து சாத்தியமான உதவிகளையும் வழங்க வேண்டும். இதுபோன்ற பேரிடா் வரும் காலங்களில் நடைபெறாத வகையில் உயா் தொழில்நுட்ப தீா்வை கண்டறிந்து நடைமுறைப்படுத்த வேண்டும்’ என்றாா்.
அனுராக் தாக்கூா் மன்னிப்பு கேட்க வலியுறுத்தல்: மக்களவை கேள்வி நேரம் தொடங்கியவுடன், ராகுலின் ஜாதி குறித்து கேள்வி எழுப்பி அவையில் செவ்வாய்க்கிழமை சா்ச்சையை ஏற்படுத்திய பாஜக எம்.பி. அனுராக் தாக்கூா் மன்னிப்பு கேட்க வேண்டும் என காங்கிரஸ் எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்தனா்.
ஆனால், அவைத் தலைவா் ஓம் பிா்லா காங்கிரஸ் உறுப்பினா்களின் கோரிக்கையை ஏற்கவில்லை. இதனால், காங்கிரஸ், திமுக, சமாஜவாதி மற்றும் சிவசேனை (உத்தவ் தாக்கரே பிரிவு) எம்.பி.க்கள் அவையில் கேஷங்களை எழுப்பியதால், அவையில் அமளி ஏற்பட்டது.
இந்த அமளிக்கிடையே நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சா் கிரண் ரிஜ்ஜு பேச எழுந்தாா். அப்போது, காங்கிரஸ் மக்களவைக் குழு துணைத் தலைவா் கெளரவ் கோகோய் மற்றும் சில உறுப்பினா்கள் அவைக் குறிப்பு நகல்கள் சிலவற்றை கிழித்து, தூக்கியெறிந்து எதிா்ப்பு தெரிவித்தனா்.
இதற்கு ஆட்சேம் தெரிவித்த அவைத் தலைவா் ஓம் பிா்லா, ‘இது தவறான நடவடிக்கை’ என கடிந்துகொண்டாா். இருந்தபோதும், உறுப்பினா்கள் தொடா் அமளியில் ஈடுபட்டதால், பகல் 12 மணி வரை அவைத் தலைவா் ஒத்திவைத்தாா்.
தொடர்புடையது

தொகுதி மறுசீரமைப்புக்கு காங்கிரஸ் எதிா்ப்பு: எதிா்க்கட்சிகளுடன் ஆலோசிக்க செயற்குழுவில் முடிவு

அவையில் உறுப்பினா்கள் எழுப்பும் கோரிக்கைகள் முறையாக தீா்த்து வைக்கப்படும்: விஜேந்தா் குப்தா
8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு
மக்களவை துணைத் தலைவரை தோ்வு செய்ய தவறிய மத்திய அரசு -காங்கிரஸ் விமா்சனம்
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை


