அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

அஸ்ஸாம் வெள்ளம்: 10 மாவட்டங்களில் 6 லட்சம் பேர் பாதிப்பு!

அஸ்ஸாமில் ஏற்பட்ட மழை வெள்ளத்துக்கு 10 மாவட்டங்களைச் சேர்ந்த 6 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

News image
Updated On :2 ஜூன் 2024, 10:19 am

DIN

அஸ்ஸாமில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 10 மாவட்டங்களில் ஆறு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தண்ணீரில் தத்தளிப்பதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.

'ரீமெல்' புயல் காரணமாக பெய்த கனமழையால் ஆற்றின் நீர்மட்டம் அதிகரித்ததால், பல பகுதிகளைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். கோபிலி, பாரக், குஷியாரா ஆறுகளின் நீர்மட்டம் அபாய அளவை தாண்டியுள்ளது.

ஹைலகண்டி ஹோஜாய், மோரிகான், கரீம்கஞ்ச், நாகோன், கச்சார், திப்ருகர், கோலாகாட், கர்பி அங்லாங் மேற்கு மற்றும் திமா ஹசாவ் மாவட்டங்களில் மொத்தம் 6,01,642 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளம் மற்றும் புயலால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நாகோனில் 2.79 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதைத் தொடர்ந்து ஹோஜாயில் 1,26,813 பேரும், கச்சாரில் 1,12,265 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

40,000-க்கும் மேற்பட்டோர் பல்வேறு மாவட்டங்களில் உள்ள நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

தேசிய, மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தால் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

மாநிலத்தின் பல பகுதிகளில் சாலை மற்றும் ரயில் சேவை தடைப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரயில் நிலையங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால், சனிக்கிழமையிலிருந்து திங்கள்கிழமை வரை 10 ரயில்கள் ரத்து செய்யப்பட்டதாக வடகிழக்கு எல்லை ரயில்வே செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.