சிக்கிம் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சி பெரும்பான்மை பெற்று இரண்டாவது முறையாக ஆட்சியை தக்கவைத்துக்கொண்டது.
இதன்மூலம் மாநிலத்தின் 11வது சட்டப்பேரவை கிராந்திகாரி மோர்ச்சா தலைமையில் அமையவுள்ளது. இதனால், 10வது பேரவையை கலைப்பதாக ஆளுநர் லக்ஷ்மன் பிரசாத் ஆச்சார்யா அறிவித்துள்ளார்.
32 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட சிக்கிம் மாநிலத்தில் இன்று (ஜுன் 2) வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் 31 தொகுதிகளில் ஆளும் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சி வெற்றிபெற்று அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கவுள்ளது.
முதல்வரிடம் இருந்து வைக்கப்பட்ட கோரிக்கையின்படியும், மே 28ஆம் தேதி நடைபெற்ற பேரவை உறுப்பினர்கள் உடனான ஆலோசனையில் எடுக்கப்பட்ட முடிவின்படியும், ஆட்சியைக் கலைப்பதாக ஆளுநர் மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனநாயக முறைப்படி 11வது சட்டப்பேரவை விரைவில் அமையும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாகாலாந்தின் புதிய ஆளுநராக நந்த் கிஷோர் யாதவ் பதவியேற்பு!

தமிழக ஆளுநர் பொறுப்பேற்றார் ராஜேந்திர ஆர்லேகர்!

தெலங்கானா ஆளுநராக பிரதாப் சுக்லா பதவியேற்பு!

தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி!
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


