புது தில்லி: தேர்தல் ஆணையத்தை காணவில்லை என்று வெளியான மீம்ஸ்களை நாங்களும் பார்த்தோம் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற்று முடிந்துள்ளது. நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறவிருக்கிறது.
இந்த நிலையில், தேர்தல் ஆணையர்கள் இன்று புது தில்லியில் செய்தியாளர்களை சந்தித்தனர்.
தேர்தல் நடத்தி முடிக்கப்பட்ட விதம், வாக்களித்த மக்களின் எண்ணிக்கை, பணியில் ஈடுபடுத்தப்பட்ட பணியாளர் எண்ணிக்கை என பல்வேறு தகவல்களை தேர்தல் ஆணையர்கள் செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்டனர்.
அப்போது ராஜீவ் குமார் பேசுகையில், நாங்கள் எங்கும் காணாமல் போகவில்லை. இங்குதான் இருக்கிறோம். தேர்தல் ஆணையம் காணாமல் போனதாக சமூக வலைத்தளங்களில் வெளியான மீம்ஸ்களை நாங்கள் பார்த்தோம் என்றார்.
மேலும், தேர்தல் பரப்புரையை தொடர்ந்து கண்காணித்தோம். பரப்புரையில் விதிமீறல்களின்போது, அரசியல் கட்சித் தலைவர்களுக்கு நோட்டீஸ்கள் பிறப்பிக்கப்பட்டது. முறையாக தேர்தல் பரப்புரை மேற்கொள்ளுமாறு கட்சிகளுக்கும் அறிவுறுத்தல்களும் அனுப்பப்பட்டன. மிகப்பெரிய அளவில் வன்முறையே நடைபெறாத தேர்தலாக இந்த மக்களவைத் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுளள்து.
நாளை நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கைக்கு மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாரபட்சமின்றி ஹெலிகாப்டர்கள், அரசியல் கட்சித்தலைவர்கள் சென்ற வாகனங்கள் கூட சோதனை செய்யப்பட்டது என்று கூறினார்.
வாக்கு எண்ணிகை தொடர்ந்து சிசிடிவி கேமரா மூலம் பதிவு செய்யப்படும்.
செய்தியாளர் சந்திப்பின்போது, வாக்களித்த வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையர்கள் எழுந்து நின்று கைதட்டி பாராட்டினார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தேர்தல் 1989: 13 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் முதல்வர் கருணாநிதி!
தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி நீக்க தீர்மானம்! நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நோட்டீஸ்
தகுதியுள்ள வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்படாது: தலைமைத் தேர்தல் ஆணையர்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த ஆலோசனை: ஞானேஷ் குமார்
வீடியோக்கள்

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை


