
ரூ. 2 ஆயிரம் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டு வரும் நிலையில், 97.82 சதவீத நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
ரூ. 7,755 கோடி மதிப்புடைய 2.2 சதவீத நோட்டுகள் இன்னும் வரவில்லை என்றும் மக்களிடையே புழக்கத்தில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
மக்களிடையே புழக்கத்தில் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெறுவதாக கடந்த ஆண்டு மே 19ஆம் தேதி ரிசர்வ் வங்கி அறிவித்தது. அப்போது 3.56 லட்சம் கோடி மதிப்புடைய நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன.
வங்கி மற்றும் அஞ்சல் அலுவலகங்கள் மூலம் ரூ.2,000 நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. நோட்டுகளை மாற்றுவதற்கு கடைசி 2023 அக்டோபர் 7ஆம் தேதி இறுதி நாள் என அறிவிக்கப்பட்டது.
எனினும், இந்தியாவின் 19 நகரங்களில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் ரூ.2,000 நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம். அதன்படி, சென்னை, தில்லி, மும்பை, கொல்கத்தா, அகமதாபாத், பெங்களூரு, போபால், பாட்னா, திருவனந்தபுரம், நாக்பூர், லக்னெள, கான்பூர், ஜம்மு ஆகிய பகுதிகளில் உள்ள ஆர்பிஐ அலுவலகங்களில் மாற்றலாம்.
இந்நிலையில், இதுவரை 97.82 சதவீத ரூ.2, 000 நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இன்னும் 2.2 சதவீத நோட்டுகள் திரும்பப் பெற வேண்டும் என்றும், இதன் மதிப்பு ரூ. 7,755 கோடி எனவும் ரிசர் வங்கி தெரிவித்துள்ளது.
ரூ.500, ரூ.1000 நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டதைத் தொடர்ந்து, 2016 நவம்பர் மாதத்தில் ரூ.2000 ஆயிரம் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.