ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

தேர்தல் முடிவு இப்படியிருக்கும் என கற்பனைகூட செய்யவில்லை: ஜெகன்மோகன்

தேர்தல் முடிவு இப்படியிருக்கும் என கற்பனைகூட செய்யவில்லை என்கிறார் ஜெகன்மோகன்

News image
ஜெகன்மோகன் ரெட்டி (கோப்புப் படம்)
Updated On :4 ஜூன் 2024, 2:44 pm

DIN

ஆந்திர மாநில பேரவைத் தேர்தல் இப்படியிருக்கும் என கற்பனைகூட செய்யவில்லை என்று ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

ஆந்திர பேரவைத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கும் நிலையில் கட்சித்தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு, ஜெகன்மோகன் ரெட்டி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

ஆந்திர மாநிலத்தில் மொத்தமுள்ள 175 பேரவைத் தொகுதிகளில் தெலுங்கு தேசம் கட்சி 135 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. பாஜக 8 தொகுதிகளிலும், ஜனசேனை கட்சி 21 தொகுதியிலும் ஜெகன் மோகன் தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் வெறும் 11 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

இந்த நிலையில், செய்தியாளர்களுடன் பேசிய ஜெகன்மோகன், மக்களின் தீர்ப்புக்கு தலைவணங்குகிறோம், மக்களின் நலனுக்காக தொடர்ந்து பணியாற்றுவோம் என்றும் ஜெகன் மோகன் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.