
ஹிமாச்சல் பிரதேசத்தில் உள்ள 4 மக்களவை தொகுதிகளிலும் பாஜக முன்னிலை வகிக்கிறது.
மண்டி தொகுதியில் போட்டியிட்ட பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் வெற்றிக்கு மிக அருகில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் விக்ரமாதித்யா சிங்கை காட்டிலும் 73,625 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.
ஹமிர்பூரில் போட்டியிட்ட மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்குர், 1,71,348 தொகுதிகள் முன்னிலையில் உள்ளார்.
காங்ராவில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் டாக்டர் ராஜிவ் பர்த்வாஜ் 2,45,987 வாக்குகள் முன்னிலையிலும் ஷிம்லாவில் பாஜக சார்பில் போட்டியிட்ட சுரேஷ் குமார் காஷ்யப் 89,660 வாக்குகள் முன்னிலையிலும் உள்ளதாக தேர்தல் ஆணையத்தின் அதிகாரபூர்வ இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.