

ஒடிஸா சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அங்கு மொத்தமுள்ள 147 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பாஜக 78 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
ஆளுங்கட்சியான நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் 51 இடங்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றுள்ளது. இதையடுத்து கடந்த 2000-ஆம் ஆண்டு முதல் ஆட்சிப்பொறுப்பில் இருந்த நவீன் பட்நாயக் பாஜகவிடம் ஆட்சியை பறிகொடுத்துள்ளார்.
காங்கிரஸ் 14 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன. சுயேச்சை வேட்பாளர்கள் 3 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.