

ராமர் கோயில் அமைந்துள்ள அயோத்தியை உள்ளடக்கிய ஃபைசாபாத் தொகுதியில் பாஜக பின்னடைவை சந்தித்துள்ளது.
தனது தேர்தல் பிரசாரத்தில் அயோத்தியை முன்னிலையில் வைத்திருந்தது பாஜக. ஆனால், அயோத்தி மாநகரம் அமைந்திருக்கும் ஃபைசாபாத்திலேயே பாஜக வேட்பாளர் பின்னடைவை சந்தித்திருக்கிறார்.
தற்போது வெளியான முன்னிலை நிலவரத்தில் ஃபைசாபாத்தில் சமாஜ்வாதி வேட்பாளர் முன்னிலையில் உள்ளார். இவர் 3000 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் மொத்தமுள்ள 80 தொகுதிகளில் அயோத்தி நகர் அடங்கிய ஃபைசாபாத் தொகுதியும் ஒன்று. இங்கு சமாஜ்வாதி வேட்பாளர் பிரசாத் 1,51,501 வாக்குகளும் பாஜக வேட்பாளர் லல்லு சிங் 1,48,143 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
கடந்த ஜனவரி மாதம் அயோத்தியில் ராமர் கோயில் பிராண பிரதிஷ்டை விழா வெகு சிறப்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்றது.
இந்த அயோத்தி கோயில் விழாவை காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் புறக்கணித்ததாக, பாஜகவின் முக்கிய தலைவர்கள் பலரும் தங்களது தேர்தல் பிரசாரத்தில் தவறாமல் மக்களிடம் எடுத்துக் கூறி வந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

அயோத்தி விரைவு ரயிலுக்கு புதுகையில் நிறுத்தம் அறிவிப்பு
ஈரான் போர் எத்தனை நாள்கள் வரை நீடிக்கும்? டிரம்ப் அதிர்ச்சி பதில்!

பாஜகவுக்கு திமுக, கம்யூனிஸ்ட் கண்டனம்

அயோத்தி ராமா் கோயில் கட்டுமானப் பணி ஏப்ரல் 30-க்குள் நிறைவடையும்!
வீடியோக்கள்

ஈரான் போரால் இந்தியாவில் பாதிப்பு | Iran Israel war | America | Dr Ramasubramanian | Dinamani
தினமணி வீடியோ செய்தி...

AI வருகையால் பாடகர்களுக்கு அச்சுறுத்தல்?: Singer காவ்யா அஜித் பேட்டி | Kavya Ajit | Exclusive |
தினமணி வீடியோ செய்தி...

இளம் வயதில் அரசியலுக்கு வந்தது ஏன்?: மனம் திறந்த மைதிலி தாக்குர் | Maithili Thakur |
தினமணி வீடியோ செய்தி...

சென்னை வந்தடைந்த அஜித்குமார்!
தினமணி வீடியோ செய்தி...

