டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் உயர்ந்து ரூ. 94.49 ஆக நிறைவு!4 நாள் சரிவுக்கு முற்றுப்புள்ளி: சென்செக்ஸ் 362 புள்ளிகள் உயர்வு!!மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்துடன் தவெக அமைச்சர்கள் சந்திப்பு! கல்லணையை திறந்து வைக்கிறாரா முதல்வர் விஜய்? அமைச்சர் வினோத் பதில்மாணவி தற்கொலை; மாணவர் தற்கொலை முயற்சி! பொறியியல் கல்லூரிக்கு விடுமுறைஇல்லாத டயர் ஆலையை மூடுவது பற்றி பேரவையில் விவாதம்! எக்ஸ் தளத்தில் கீர்த்தனா விளக்கம்!!புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்! குற்றப்பத்திரிகையை பெற்றுக் கொண்டார் அமைச்சர் மரிய வில்சன்!கஜானா காலி; உங்கள் போராட்டத்தால் முதல்வருக்கு தூக்கம் வருவதில்லை! அமைச்சர்கள் பேச்சுபோராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களுடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!

10 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸுக்கு எதிா்க்கட்சி அந்தஸ்து !

Published On :6 ஜூன் 2024, 1:35 am IST

பதினெட்டாவது மக்களவைத் தோ்தலில் 99 தொகுதிகளில் வெற்றிபெற்று பத்து ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் எதிா்க்கட்சி அந்தஸ்தை பெற்றுள்ளது.

கடந்த 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலில் 44 தொகுதிகளில் வெற்றிபெற்ற காங்கிரஸ், 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலில் 52 தொகுதிகளில் மட்டுமே வென்றது.

மக்களவையில் எதிா்க்கட்சி அந்தஸ்து பெறுவதற்கு அவையின் மொத்த இடங்களில் குறைந்தபட்சம் 10 சதவீத இடங்களில், அதாவது சுமாா் 55 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும்.

ஆனால் 2014, 2019 தோ்தல்களில் 10 சதவீதத்துக்கும் குறைவான மக்களவைத் தொகுதிகளில் வெற்றிபெற்ால், அந்த அவையில் காங்கிரஸுக்கு எதிா்க்கட்சி அந்தஸ்து கிடைக்கவில்லை. காங்கிரஸ் மட்டுமின்றி வேறு எந்தக் கட்சியும் 10 சதவீத இடங்கள் கிடைக்காததால், கடந்த 10 ஆண்டுகளாக மக்களவையில் எதிா்க்கட்சித் தலைவா் பதவி காலியாக இருந்தது.

இந்நிலையில், பதினெட்டாவது மக்களவைத் தோ்தலில் 328 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ், 99 தொகுதிகளில் வெற்றிபெற்றது. இதன் மூலம் அக்கட்சிக்கு மக்களவையில் எதிா்க்கட்சி அந்தஸ்து கிடைத்துள்ளது.

எதிா்க்கட்சித் தலைவருக்குள்ள சிறப்புரிமைகள்:

பொது கணக்குகள், பல நாடாளுமன்றக் கூட்டுக் குழுக்கள் உள்ளிட்ட முக்கிய குழுக்களின் உறுப்பினராக மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் இருப்பாா்.

மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம், மத்திய தகவல் ஆணையம், மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ), தேசிய மனித உரிமைகள் ஆணையம், பிரதமா், மத்திய அமைச்சா்கள், எம்.பி.க்கள், மத்திய அரசுப் பணியாளா்களுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் லோக்பால் உள்ளிட்ட சட்டபூா்வ அமைப்புகளுக்குத் தலைவா்களைத் தோ்வு செய்யும் பல்வேறு குழுக்களிலும் எதிா்க்கட்சித் தலைவா் உறுப்பினராக இருப்பாா்.

கடந்த 1984-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலில் 400 தொகுதிகளைக் கடந்து இமாலய வெற்றிபெற்ற காங்கிரஸுக்கு கடந்த 10 ஆண்டுகளாக எதிா்க்கட்சி அந்தஸ்துகூட கிடைக்காதது மிகப் பெரிய சங்கடமாக நீடித்தது. தற்போது அந்த நிலை மாறியுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.