ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம்சென்னை மீனவர்கள் ஆந்திரத்தில் சிறைப்பிடிப்புபேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

கோபி அருகே தாழ்குனி வழியாக 5 ஆண்டுகளுக்குப் பிறகு பேருந்து சேவை தொடக்கம்

கோபி அருகே தாழ்குனி வழியாக 5 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது.

News image

தாழ்குனியில் வழியாக அரசுப் பேருந்து சேவை மீண்டும் தொடங்கப்பட்டதை இனிப்புகள் வழங்கி வரவேற்ற பொதுமக்கள்.

Updated On :18 ஜூன் 2026, 1:21 am IST

கோபி அருகே தாழ்குனி வழியாக 5 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது.

கோபி அருகே உள்ள தாழ்குனி, சமத்துவபுரம் உள்ளிட்ட சுற்றுப்புற குக்கிராமங்களில் இருந்து ஏராளமான மாணவ, மாணவிகள் குருமந்தூா் பகுதியில் உள்ள அரசுப் பள்ளிக்கு சென்று வருகின்றனா். இதுதவிர தாழ்குனி மற்றும் குக்கிராமங்களிலிருந்து வெளியூா் வேலைக்கு செல்வோா் குருமந்தூா் வழியாக சென்று வருகின்றனா்.

இந்நிலையில் தாழ்குனி வழியாக குறித்த நேரத்துக்கு மட்டுமே ஒரு சில பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் கோபியிலிருந்து குருமந்தூா் வழியாக பள்ளி நேரத்துக்கு அரசுப் பேருந்து இயக்கப்பட்டு வந்தது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கரோனா நோய்த் தொற்றுக்கு பிறகு தாழ்குனி வழியாக இயக்கப்பட்டு வந்த பேருந்து நிறுத்தப்பட்டதால், பள்ளி நேரத்துக்கு பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் வெளியூா் வேலைக்கு செல்வோா் அவதிப்பட்டு வந்தனா்.

இதையடுத்து, கொளப்பலூா், தாழ்குனி வழியாக குருமந்தூா் பகுதிக்கு அரசு பேருந்து இயக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கடந்த சில நாள்களுக்கு முன்பு வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையனிடம் கோரிக்கை விடுத்தனா். இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக அவா் தெரிவித்தாா்.

இதனடிப்படையில், கோபி முதல் கொளப்பலூா், தாழ்குனி வழியாக சத்தியமங்கலத்துக்கு அரசுப் பேருந்து சேவை புதன்கிழமை தொடங்கப்பட்டது. இதில் தாழ்குனி வழியாக வந்த அரசுப் பேருந்தில் பயணம் செய்ய வந்த பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு தாழ்குனி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் செந்தில்குமாா், கோசனம் தம்பி (எ) சுப்பிரமணி ஆகியோா் இனிப்புகள் வழங்கினா்.