ஆள் கடத்தல் வழக்கில் 2 பேர் கைது: என்ஐஏ காவலில் வைத்து விசாரிக்க மும்பை நீதிமன்றம் மறுப்பு

ஆள் கடத்தல் மோசடியில் ஈடுபட்டதாகக் கூறி கைது செய்யப்பட்ட 2 பேரை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) காவலில் வைத்து விசாரிக்க மும்பை சிறப்பு நீதிமன்றம் மறுத்துள்ளது.
ஆள் கடத்தல் வழக்கில் 2 பேர் கைது: என்ஐஏ காவலில் வைத்து விசாரிக்க மும்பை நீதிமன்றம் மறுப்பு
Published on
Updated on
1 min read

மும்பை: அதிக சம்பளம் தரும் வேலை வாங்கித் தருவதாகக் கூறி இந்தியர்களை வெளிநாடுகளுக்கு இழுத்துச் சென்று ஆள் கடத்தல் மோசடியில் ஈடுபட்டதாகக் கூறி கைது செய்யப்பட்ட 2 பேரை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) காவலில் வைத்து விசாரிப்பதற்கு மும்பை சிறப்பு நீதிமன்றம் மறுத்துள்ளது.

வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றும் போலி முகவர்கள் மூலம், தென்கிழக்காசிய நாடான கம்போடியாவுக்கு

அழைத்துச் செல்லப்பட்ட பெரும்பாலும் 20-45 வயதுக்குட்பட்ட இந்திய ஆண்கள், அங்கு அவர்கள் சித்திரவதை செய்யப்பட்டு அடிமைத்தனத்திற்கு உட்படுத்தப்பட்டு சட்டவிரோத சைபர் குற்றச் செயல்களில் பணியமர்த்தப்பட்டனர் என்று தேசிய புலனாய்வு முகமை தெரிவித்துள்ளது.

தாய்லாந்திற்கு இந்தியர்களை அனுப்பியது தொடர்பாக ஜேக்கப் மற்றும் அல்வாரெஸ் ஆகியோரை மும்பை காவல்துறையினர் மார்ச் மாதம் கைது செய்தனர்.

இருவர் மீதும் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 370 (மனித கடத்தல்) மற்றும் பிற குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர்கள் தற்போது நீதிமன்ற காவலில் உள்ளனர்.

சர்வதேச மனித கடத்தல் கும்பலுடன் இவர்களுக்கு தொடர்பு இருப்பதாகக் கூறி, என்ஐஏ சமீபத்தில் விசாரணையை மேற்கொண்டது.

ஆள் கடத்தல் வழக்கில் 2 பேர் கைது: என்ஐஏ காவலில் வைத்து விசாரிக்க மும்பை நீதிமன்றம் மறுப்பு
40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி: ஓரிடம்கூட வெல்லாத அதிமுக, பாஜக அணிகள்

இதையடுத்து வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றும் போலி முகவர்கள் மூலம், தென்கிழக்காசிய நாடான கம்போடியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்கள் அங்கு சித்திரவதை செய்யப்பட்டு அடிமைத்தனத்திற்கு உட்படுத்தப்பட்டு கிரெடிட் கார்டு மோசடிகளில் ஈடுபடுவதற்கு கட்டாயப்படுத்துவது போன்ற "சர்வதேச சதி" சட்டவிரோத சைபர் குற்றச் செயல்களில் பணியமர்த்தப்பட்டனர் என்றும். அவர்களை என்ஐஏ காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரியது என்ஐஏ.

இதனைத்தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டவர்களை முறைப்படி கைது செய்ய விசாரணை நிறுவனத்துக்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது.

இந்த நிலையில்,மும்பை சிறப்பு நீதிமன்ற சிறப்பு நீதிபதி ஏ.கே.லஹோட்டி செவ்வாய்க்கிழமை பிறப்பித்த உத்தரவில், அதிக சம்பளம் தரும் வேலை வாங்கித் தருவதாகக் கூறி இந்தியர்களை வெளிநாடுகளுக்கு இழுத்துச் சென்று ஆள் கடத்தல் மோசடியில் ஈடுபட்டதாகக் கூறி கைது செய்யப்பட்ட ஜெர்ரி பிலிப்ஸ் ஜேக்கப் மற்றும் கோதாபி அல்வாரெஸ் ஆகியோரை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) காவலில் வைத்து விசாரிப்பதற்கு மறுப்பு தெரிவித்தார். மேலும் குற்றம் சாட்டப்பட்டுள்ள 2 பேரையும் நீதிமன்றக் காவலில் இருக்கும்போதேு தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் விசாரிக்கலாம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com