என் வாழ்நாளில் இதுபோன்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க தேர்தலை நான் கண்டதில்லை. தெலுங்கு தேசம் கட்சியை வெற்றிபெற வைத்த மக்களுக்கு மிக்க நன்றி என்று சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
மத்தியில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சியின் தலைமையில் ஆட்சி அமைவதில் முக்கியப் பங்காற்றவிருக்கும் சந்திரபாபு நாயுடுவை, அரசியல் பார்வையாளர்கள் கிங் மேக்கர் என குறிப்பிட்டு வருகிறார்கள்.
ஆந்திர மாநில சட்டப்பேரவைத் தேர்தலில், தெலுங்கு தேசம் கட்சி அமோக வெற்றி பெற்ற நிலையில், அடுத்த என்ன செய்யப்போகிறது கட்சி என்பது குறித்து செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளிக்கிறார் சந்திரபாபு நாயுடு.

தனது இல்லத்தில் குடும்பத்துடன் தோ்தல் வெற்றியைக் கொண்டாடிய சந்திரபாபு நாயுடு.
ஆந்திரத்தில் பதவியேற்புக்கான ஏற்பாடுகள், மத்தியில் யாருக்கு ஆதரவு அளிப்பது என தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கூட்டத்தில் பங்கேற்பதற்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்துள்ளார்.
அப்போது அவர் பேசுகையில், மக்கள் நலனுக்காக எந்த தியாகத்தையும் செய்யத் தயார். கடந்த ஐந்து ஆண்டு கால ஆட்சியில் மக்கள் பல்வேறு துன்பங்களுக்கு ஆளானார்கள் என்றார்.
நான் எதிர்பார்த்ததைவிட மக்கள் எங்கள் கட்சிக்கு வாக்களித்துள்ளனர். தெலுங்கு தேசத்துக்குக் கிடைத்த வெற்றி மக்களுக்குக் கடைத்த வெற்றி. ஜெகன்மோகன் ஆட்சியில் மிக மோசமாகத் துன்புறுத்தப்பட்டேன், மக்களுக்கு சேவை செய்ய அதிகாரத்துக்கு வரும்போது, அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யக்கூடாது.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில்தான் இருக்கிறேன். அந்தக் கூட்டணியின் ஒரு அங்கமாகவே இந்த வெற்றி கிடைத்துள்ளது. நாட்டில் பல்வேறு அரசியல் திருப்பங்களை பார்த்துள்ளேன். பல்வேறு அரசியல் அனுபவம் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
ஆந்திர சட்டப்பேரவைக்கு நடந்த தேர்தலில், மொத்தமுள்ள 175 பேரவைத் தொகுதிகளில் தெலுங்கு தேசம் கட்சி 134 இடங்களைக் கைப்பற்றி, தனிப்பெரும்பான்மையுடன் அமோக வெற்றிபெற்றுள்ளது. கூட்டணி கட்சிகளான ஜனசேனை 21 இடங்களிலும், பாஜக 8 இடங்களிலும் வென்றுள்ளன.
தெலுங்கு தேசம் அமோக வெற்றிபெற்றுள்ள நிலையில், அக்கட்சியின் தலைவா் சந்திரபாபு நாயுடு (74) முதல்வராக பதவியேற்கவுள்ளாா். இங்கு ஆட்சியிலிருந்த ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் கட்சிக்கு வெறும் 12 இடங்கள் மட்டுமே கிடைத்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

டி.கே. சிவகுமார் தலைமையில் அமோக வெற்றி.. கர்நாடகத்தின் 7 சட்டமேலவை இடங்களில் 5-ஐ கைப்பற்றிய காங்கிரஸ்!!

நாட்டை ஊழல் படுகுழியில் தள்ளியது காங்கிரஸ்- பிரதமா் மோடி கடும் விமா்சனம்

திமுக, திரிணமூல் ஆதரவுடன் தொகுதி மறுவரையறை மசோதா? பாஜக திட்டமும் கணக்கும்!

இன்று பாஜக கூட்டணி கூட்டம்
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan




